Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ அரிய வகை நோய்களுக்கு மூலிகை மருந்து தயாரிக்கும் விஜயலட்சுமி

அரிய வகை நோய்களுக்கு மூலிகை மருந்து தயாரிக்கும் விஜயலட்சுமி

அரிய வகை நோய்களுக்கு மூலிகை மருந்து தயாரிக்கும் விஜயலட்சுமி

அரிய வகை நோய்களுக்கு மூலிகை மருந்து தயாரிக்கும் விஜயலட்சுமி

ADDED : செப் 15, 2025 04:53 AM


Google News
Latest Tamil News
வெண்ணெய்க்கு பெயர் போன தாவணகெரேயின் தொட்டபதி அருகே உள்ள நீலனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர், அரிய வகை நோய்களுக்கு மூலிகை மருந்து தயாரித்து விற்பனை செய்கிறார்.

இதுகுறித்து விஜயலட்சுமி கூறியதாவது:

இந்திய மருத்துவ முறையில் மிக பழமையான பராம்பரியம் கொண்ட, ஆயுர்வேதம் மீது எங்கள் குடும்பம் முழு நம்பிக்கை கொண்டு உள்ளது. எனது மாமனார் சந்திரேகவுடா கடந்த 50 ஆண்டுகளாக மூலிகை மருந்து தயாரிக்கிறார். அவரிடம் இருந்து நானும், எனது கணவர் ஆனந்தும் மூலிகை மருந்துகளை தயாரிப்பது எப்படி என்று கற்று கொண்டோம்.

தோல் நோய்களை தவிர நீரிழிவு, இரைப்பை அழற்சி, சிறுநீரக கற்கள், இருமல், நரம்பு பலவீனம், மூட்டுவலி, மூல நோய், குதிகால் வெடிப்பு, பொடுகு, தாய்ப்பால் பற்றாக்குறை போன்ற பிரச்னைகளுக்கு மூலிகை மருந்து தயாரித்து கொடுக்கிறோம்.

மூலிகை மருந்து தயாரிப்பதற்கான சில செடிகளை எங்கள் வீட்டை சுற்றி வளர்க்கிறோம். மற்ற செடிகளை ஏரி கரையில் இருந்து பறித்து வருகிறோம். நாங்கள் தயாரிக்கும் தாமரை மலர் குல்கந்திற்கு சந்தையில் நிறைய தேவை உள்ளது. எனது கணவர் ஆனந்த் லட்சுமண கவுடா ஏரிக்குள் சென்று தாமரை மலர்களை பறித்து வருவார்.

இதழ்களை பிரித்து நன்கு கழுவி, வெல்லம், ஏலக்காய், ஜாஜி கொட்டைகளை சேர்த்து, குல்கந்த் நன்கு மென்மையாகும் வரை வேகவைத்து ஜாடியில் நிரப்பி விற்பனை செய்கிறோம். ஆறு மாதங்கள் வரை கெட்டு போகாது.

ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்களுக்கு, குல்கந்த் பயனுள்ள மருந்து. வயிறு தொடர்பான பிரச்னையையும் குணப்படுத்துகிறது. பாலுாட்டும் தாய்மார்களுக்கு, அஸ்பாரகஸ் செடி வேரில் இருந்து தயாரிக்கும் மூலிகை கொடுக்கிறோம்.

முத்தினகந்தி மடத்தின் மடாதிபதி சிவகுமாரசாமி எழுதிய ஆரோக்கிய தர்பணா புத்தகம், மூலிகை மருந்து தயாரிப்பதற்கு உதவியாக இருந்தது. ஆதிசக்தி சஞ்சீவினி மகளிர் சுயஉதவி குழு மூலம், நாங்கள் தயாரிக்கும் மூலிகை மருந்துகளை விற்பனை செய்கிறோம். அரசு சார்பில் நடக்கும் மருத்துவ கண்காட்சியிலும், எங்களுக்கு ஒரு ஸ்டால் கிடைக்கிறது.

மூலிகைகளில் இருந்து மருந்து தயாரிப்பது மட்டுமின்றி, உணவு பொருட்களும் தயாரிக்கிறோம். மொபைல் போனில் தொடர்பு கொண்டு ஆர்டர் செய்தால் கூரியர் மூலம் மருந்து அனுப்பி வைக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மருந்துகள் தேவைப்படுவோர் விஜயலட்சுமி: 81840 47534, கணவர் ஆனந்த்: 87470 33702 ஆகிய எண்களில் அழைக்கலாம்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us