/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இரண்டரை வயது குழந்தை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இரண்டரை வயது குழந்தை
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இரண்டரை வயது குழந்தை
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இரண்டரை வயது குழந்தை
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இரண்டரை வயது குழந்தை
ADDED : மே 26, 2025 12:07 AM

ஷிவமொக்கா அருகே ஆனவட்டி கிராமத்தில் வசிக்கும் குருராஜ் ஷெட்டி - சத்யஸ்ரீ தம்பதியின் மகள் கியான்ஷா. 22 மாத குழந்தையாக இருந்தபோது, பெற்றோர் சொல்லிக் கொடுத்த நர்சரி ரைம்ஸ்களை வாயில் முணுமுணுக்க ஆரம்பித்தது.
கியான்ஷாவிடம் நினைவாற்றல் சக்தி உள்ளது பற்றி அறிந்த பெற்றோர், கியான்ஷாவுக்கு ஆங்கிலம், தெலுங்கில் ஆறு நர்சரி ரைம்ஸ்கள், 13 வாகனங்கள் பெயர்கள், ஒன்பது விலங்குகள், ஒன்பது வண்ணங்கள், 15 உடல் பாகங்கள், ஐந்து நாடுகளின் சின்னங்கள், 22 பொருட்களின் பெயர்களை சொல்லிக் கொடுத்தனர். இவற்றை கூர்ந்து கவனித்த கியான்ஷாவும், பெற்றோர் கேட்கும்போது சொல்லி அசத்தினார்.
கியான்ஷாவின் திறமையை உலகத்திற்கு தெரியப்படுத்தும் நோக்கில், குழந்தையிடம் கேள்வி கேட்டு அளிக்கும் பதிலை வீடியோவாக பதிவிட்டு, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்சுக்கு, பெற்றோர் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்சில் இருந்து வந்தவர்கள், கியான்ஷாவை நேர்காணல் கண்டு கேள்விகள் கேட்டனர். அதற்கு சரியாக பதில் கொடுத்ததால், குழந்தை கியான்ஷாவுக்கு இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் விருது வழங்கி கவுரவப்படுத்தினர்.
எதிர்காலத்தில் தங்கள் மகளுக்கு இன்னும் நிறைய சொல்லிக் கொடுக்க ஆசைப்படுவதாக குருராஜ் ஷெட்டி - சத்யஸ்ரீ தம்பதி தெரிவித்தனர்.