/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ பூக்கோலத்தில் சாதிக்கும் பி.எஸ்சி., மாணவி பூக்கோலத்தில் சாதிக்கும் பி.எஸ்சி., மாணவி
பூக்கோலத்தில் சாதிக்கும் பி.எஸ்சி., மாணவி
பூக்கோலத்தில் சாதிக்கும் பி.எஸ்சி., மாணவி
பூக்கோலத்தில் சாதிக்கும் பி.எஸ்சி., மாணவி
ADDED : ஜூன் 02, 2025 12:27 AM

பெண்களுக்கு கோலம் போடுவது, பெரிய விஷயமே அல்ல. ஆனால், தட்சிண கன்னட மாவட்ட இளம் பெண் ஒருவர், பூக்களால் பெரிய, பெரிய வண்ணமயமான கோலங்கள் போட்டு, இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
பொதுவாக அரிசி மாவு, கோலமாவு பயன்படுத்தி கோலம் போடுவது வழக்கம். ஒரு இளம் பெண், பூக்களால் கோலங்கள் போட்டு, சாதனை செய்துள்ளார். தட்சிண கன்னட மாவட்டம், பெல்தங்கடி தாலுகாவின் லாயிலா ஏனெஞ்சே கிராமத்தில் வசிப்பவர் ஷிரத்தா ஷெட்டி, 21. இவர் எஸ்.டி.எம்., கல்லுாரியில், பி.எஸ்சி., படிக்கிறார்.
சிறுமியாக இருக்கும் போதே, இவருக்கு கோலம் போடுவது, ஓவியக்கலையில் அதிக ஆர்வம் காண்பித்தார். இந்த கலைகளில் அவர் கை தேர்ந்தவர். தன் கலையை வைத்து ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என, பெரிதும் விரும்பினார். தன் திறனை காட்ட, பூக்கோலங்களை தேர்வு செய்தார்.
வீட்டு வளாகத்தில் 8 அடி அகலமான கோலங்கள் போட்டு பயிற்சி செய்தார். இவ்வளவு பெரிய கோலத்தை ஒன்றரை மணி நேரத்தில் போட்டு முடிக்கிறார். சவுட்கா திறந்தவெளி விநாயகர் கோவிலில் இருந்து மீதமான மல்லிகை, சிவப்பு ரோஜாக்கள், மஞ்சள், ஆரஞ்சு நிற செண்டுப்பூக்கள், துளசி இலைகள் பயன்படுத்தி, கோலத்தை போட்டுள்ளார்.
குறுகிய நேரத்தில் வண்ணமயமான பூக்கோலம் போடும் தன் சாதனை குறித்து, இந்திய சாதனை புத்தகத்துக்கு தெரிவித்தார். நடப்பாண்டு ஜனவரி முதல் சாதனை புத்தகத்தில் இடம் பெற, முயற்சித்து வந்தார். பல முறை தோல்வி ஏற்பட்டது. ஆனால் தன் முயற்சியை கைவிடவில்லை.
மீண்டும் வீட்டு வெளிப்புறம் பிரமாண்ட பூக்கோலம் போட்டு, இந்திய சாதனை புத்தகத்துக்கு அனுப்பினார். இது சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
நடப்பாண்டு ஏப்ரலில், அவரது பெயர் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததற்கான, அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர் யாரிடமும் பயிற்சி பெறவில்லை; கற்றுக்கொள்ளவும் இல்லை. பள்ளி ஆசிரியர்கள் அளித்த ஊக்கத்தால், தன் சொந்த முயற்சியால், கற்பனை திறனால் இச்சாதனையை செய்துள்ளார்.
பூக்கோலங்கள் போடுவதில் மட்டுமல்ல, ஓவியங்கள் வரைவதிலும் அபார ஞானம் கொண்டவர். கடவுள்கள், நடிகர், நடிகை உருவப்படங்களை, தத்ரூபமாக வரைகிறார்.
- நமது நிருபர் -