கதைச் சுருக்கம்
தன் பாலிடிக்ஸ் பாஸ் பயில்வான் ராதாரவியை ஆர்.கே.சுரேஷ் எச்சரிக்கும் காட்சி, இவனை ஓங்கி விட்ட அறை தான்னே, உங்க படுக்கை அறை வரைக்கும் கேட்டுச்சு.... என பம்பரத்தானை அறைந்து விட்டு ராதாரவியையும் ஒர் அறை விடும் சுரேஷ் ., வில்லத்தனத்தில் வாவ் சொல்ல வைக்கிறார்.
வில்லன் ரோலக்ஸ் பாண்டி எனும் ஆர்.கே சுரேஷ், பயில்வானுக்காக நாலு பேரைக் கொன்னவன், எனக்காக அவனையே கொல்ல மாட்டேனா என்ன...? என லந்து பண்ணும் இடங்களிலும் சரி, அப்பத்தாவை ஆயில் பாத் எடுக்க விட்டு, ஐஸ் வாட்டரில் மூழ்க விட்டு, இளநீரில் மருந்து கலந்து இரவில் ஜன்னி வர வைத்து பதற விடும் கொடூரத்திலும் சரி, தனது நடிப்பில் முந்தைய தாரை தப்பட்ட யைக் காட்டிலும் கிழிய விட்டிருக்கிறார் மனிதர். அசால்ட்டாய், அதிரடி காட்சிகளில் அருவாலும் கையுமாக மோதுவதிலும், அதிலும் விஷாலுடன் க்ளைமாக்ஸில் மோதும் காட்சியில் சுரேஷின் அதிரடிஅதகளம்!
யார்? இந்தபொம்பளை திலகன்..? எனக் கேட்கும் அளவுக்குபொளந்து கட்டி யிருக்கிறார் விஷாலின் அப்பத்தாள் மாரியம்மாள்ளாக வரும் கேரள - கோலப் புலி லீலா. டேய் , ரோலக்ஸ்.. நீயெல்லாம் ஒத்த ஆள அடிக்க பத்துஆள கூட்டிக்கிட்டு போவ ஆனா, என் பேரன் பத்து பேர... அடிக்க ஒத்த ஆளா போவான் ... என வீரமாக வில்லனிடம் சவடால் விடும் இடம் ஒன்று போதும்... பாட்டியின் நடிப்புத் திறமையை பறைசாற்ற... அடி ஆத்தி .. யாருப்பா இந்த பாட்டி ? என மீண்டும், மீண்டும் கேட்க வைத்து விடுகிறார் மனுஷி!
உன் நிழல்ல பேய் நின்னாலே... தாயா மாறும்... என பேரன் மருது புகழ் பாடுவதில் தொடங்கி., என் பேரனுக்கு ... பதவி நீ வாங்கித் தர்றியா ... இங்கப் பாருடா கொக்கரக்கோ..., என ராதாரவியின் ஆள் பம்பரத்தானிடம் எளக்காரம் செய்வது வரை சகலத்திலும் அந்த அப்பத்தாள் மாரியம்மாள் பாட்டியாக வரும் கேரள - கோலப் புலி லீலா நிச்சயமாக பலவிருதுகள் வாங்கும் அளவு நடித்திருக்கிறார் என்றால் மிகையல்ல!
சொசைட்டி தலைவராக, பெரிய மனித பயில்வானாக ராதாரவி, சுரேஷின் அக்கா புருஷனாக அருள்தாஸ், ஸ்ரீதிவ்யாவின் அப்பாவாக வக்கீல் சங்கரபாண்டியனாக மாரிமுத்து, சிலம்பம் மாரியம்மாவாக ஸ்ரீதிவ்யாவின் அம்மாவாக வரும் ஆதிரா பாண்டி லட்சுமி... ஆகிய எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.
பிரவின் கே.எல்.லின் படத்தொகுப்பு, கே.வீர சமரின் கிராமிய மணம் மாறா கலை இயக்கம், அனல் அரசுவின் சண்டை பயிற்சி, பாபா சங்கரின் நடன அமைப்பு, வேல்ராஜின் ஒளிப்பதிவில் பச்சை பசேல் கிராம பகுதிகளும் அதில் படமாக்கப்பட்டிருக்கும் டூயட் காட்சிகளும், ஆக்ஷன் காட்சிகளும் அம்சமாய் இருக்கின்றன .
டி.இமானின் இசையில் நிமிர்ந்து நின்னா கதிரு நேர்மையின்னா மருது..., ஒத்த சடை ரோசா நெஞ்சைக் கிழிக்கிறா..., அக்கா பெத்த ஜக்கா வண்டி... கருவ காட்டு கருவாயா.... உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் படத்தைமேலும் ஜோராக்குகின்றன!
ஆக மொத்தத்தில் முத்தையா எழுத்து, இயக்கத்தில், பேப்பரில் ஸ்ரீதிவ்யாவை காணவில்லை... என விளம்பரம் கொடுத்து ஸ்ரீயை தன், வீட்டிற்கு வரவழைக்கும் அப்பத்தாளின் சாமர்த்தியம், விஷாலுக்கும் இப்படத்திற்கும் மருது எனும் பெயர் காரணமாக, கட்டபொம்மன் , ஊமத்துரை, மருது, என அப்பாத்தான் வரலாறு சொல்லும் இடம் ... உள்ளிட்ட உணர்ச்சிகரமான காட்சிகளுக்காவும், உனக்கு வேண்டிய பதவிய அவரு பார்த்து வாங்கித் தருவாரு ... அவருக்கு வேண்டிய சல்லித்தனம் எல்லாம் நீ செஞ்சு தருவ... அஞ்சு வருஷம் அதிகாரத்துல இருக்கிற நமக்கே இவ்வளவு கொழுப்பு இருக்குன்னா ஐம்பது வருஷம் அதிகாரத்துல இருக்கிறவனுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும் ...? என்பது உள்ளிட்ட நச் - டச் வசனங்களுக்காகவும், கிராமிய மனம் கமழும் யதார்த்த காட்சிகளுக்காகவும் விஷாலின் மருது படத்திற்கு ரசிகர்கள் நிச்சயம் தரலாம் வெற்றி விருது!
மற்றபடி, குட்டிப்புலி, கொம்பன் என ஒரே மாதிரி கிராமியக் கதைகளை எடுக்கிறார் முத்தைய்யா எனும் சிட்டி ரசிகர்களின் அங்கா லயிப்புகளையும், பெற்றதாய் வெட்டுபட்டு இறந்தபின்பும் ஸ்ரீதிவ்யாவுக்கு எப்படி? ஆம்பளைகளை சபையில் அடிக்கும் அளவு இத்தனை வீரம்..? எனும் லாஜிக் கேள்விகளையும் ஓரம் வைத்துவிட்டு, மருது படம் பார்த்தால் ரசிகனுக்கு நிச்சயம் விருந்து இப்படக் குழுவினருக்கு அதுவே விருது!
------------------------------------------------------
குமுதம் விமர்சனம்
பாட்டியையும் (வருங்கால) மாமியாரையும் கொலை செய்த வில்லன் கும்பலை தனி ஒருவனாக விஷால் போட்டுத் தள்ளும் தெக்கத்தி கிராம அதிரடிதான் மருது. இயக்கம் முத்தையா.
மூட்டை தூக்கும் இளைஞன் வேடம் விஷாலுக்கு உடம்பை முறுக்கேற்றி வைத்திருப்பது ரொம்ப பொருந்துகிறது. ஆக் ஷன் காட்சிகளில் உக்கிரம்.
படம் முழுக்க லேசான முறைப்போடு ஸ்ரீதிவ்யா பலே அட, நடிப்பு வருது கண்ணு!
ரொம்ப நாள் கழித்து சூரி கலகலக்க வைக்கிறார். ஸ்ரீதிவ்யாவைப் பிடிக்காதது போல் விஷால் இருக்க, ஏன்டா உனக்கு லட்சுமி மேனன் மாதிரிதான் பொண்ணு வேணுமா? என்று போட்டு வாங்குவதும், நடிகர் சங்கத் தேர்தலை நினைவு படுத்தும் வசனங்களும் அள்ளுது.
படத்தில் எல்லோரையும் தூக்கிச் சாப்பிடுபவர் அந்தப் பாட்டி லீலா. மனோரமாவின் ஆவி அவர் உடலில் இறங்கியிருக்க வேண்டும். பேரன் மேல் இருக்கும் பாசமும், சூரியையும் அப்படியே பாவிக்கும் நேசமும், அந்தப் பாட்டியை பார்க்கப் பார்க்க பிடித்துப் போகிறது. அவரது மரணத்தை இத்தனை கொடூரமாகக் காண்பித்தது அக்கிரமம். சரி, தனக்கு ஏற்பட்ட கொடுமையை பாட்டி ஏன் பேரனிடம் சொல்லவில்லை?
அக்கா பெத்த பாடலில் இமான் பக்கா.
காதல் மோதல் என்று ஜாலியாகப் பேய்க் கொண்டிருக்கையில் இடைவேளைக்குப் பிறகுதான் இழுக்கிறது.
மருது - ஜாதி மல்லி
குமுதம் ரேட்டிங் - ஓகே


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.