கதைச் சுருக்கம்
குமுதம் சினி விமர்சனம்
கொம்பன்
ஒரு சின்ன கத்தியில் இந்தக் கதையை எழுதிவிட முடியும்.
மாமனாருக்கும் மருமகனுக்கும் இருக்கும் பாசப் பிணைப்பை ஏகப்பட்ட ரத்தக் களறிகளுக்கிடையேசொல்லும் படம் இது.
வீட்டோடு மாமனாராக வருகிறார் ராஜ்கிரண். மாப்பிள்ளை கார்த்தி, ஒரு கோப தருணத்தில் மாமாவைத் தாக்கிவிட, அப்புறம் என்ன? அவர் வீட்டை விட்டு தன் மகளுடன் வெளியேற, மாமாவின் அருமை புரிந்து, அனைவரும் ஒன்று சேருகிறார்கள்.
பருத்திவீரனை நினைவு படுத்தும் கார்த்தி. பொசுக் பொசுக்கென கோபப்படுவது ரொம்ப இயற்கை. சண்டைக்காட்சிகளில் சுறுசுறு. ஆனால், ஒரே மாதிரியாக பத்து நிமிடத்துக்கு ஒரு சண்டை வைப்பது போதும்டா சாமி என்று சொல்ல வைக்கிறது.
கும்கி லட்சுமி, க்ளாமர் குளத்துக்குள் குதித்து விட்டார். (சந்தோஷம்தானே?) தந்தைப் பாசத்துக்கும் கணவன் பாசத்துக்குமிடையே தள்ளாடுவது க்யூட்.
ராஜ்கிரணை வீணடித்து விட்டார்களோ என்ற முன்பாதியில் நினைக்கத் தோன்றுகிறது. அதன்பிறகு மனிதர் விஸ்வரூபமெடுக்கிறார்.
கோவை இல்லாத சரளாவிடம் மனோரமா வாசனை!
தம்பி ராமய்யா தன் ட்ரெண்டடை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆளுக்கு ஆள் அடிக்கிறதாலதான் ஆல்கஹால்னு பேர் வச்சுருக்காங்க - சொல்லும்போது மட்டும் தியேட்டர் வெடிக்கிறது.
கொடூர வில்லனாக வரும் சுப்பராயன் சூப்பர்! ஜி.வி.யின் ஹாட்டான ஒரு பாடல் செமை கூல்!
கொம்பன் - இன்னும் கொஞ்சம் கூர்மையாக கொம்பு சீவியிருக்கலாம்.
குமுதம் ரேட்டிங் - ஓகே

























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.