கதைச் சுருக்கம்
குமுதம் சினி விமர்சனம்
பரபரவென ஒரு பக்கா ஆக்ஷன் படம்.
எல்லா அக்ரமங்களையும் செய்யும் வில்லனை தனி ஒருவனாக திட்டம் போட்டு காலி செய்யும் கதாநாயகனின் கதைதான். ஆனால் திரைக்கதை, திடீர் திருப்பம் என்று ஜெகஜாலம் காட்டியிருக்கிறார், மோகன் ராஜா.
காக்கி உடுப்பு, ஜெயம் ரவிக்கு செமை மிடுக்கு. ஆக்ஷன், காதல், கோபம் என்று முன்னேற்றம்.
நயன்தாரா வீட்டு கடிகாரம் மட்டும் ரிவர்ஸில் சுற்றும் போலிருக்கிறது. ஆமாம், நாளுக்கு நாள் வயது குறைந்து கொண்டே போகிறது. செல்லக் கோபமும் மெல்லிய காதலும் லவ்லி!
கொடூர வில்லனாக அரவிந்தசாமி! கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாத அந்த அனாயாசம் ஆசம்! சாகும்போது ரகசியத்தை நீ கேட்டே! நான் கொடுத்தேன் என்று சொல்வது சிலிர்ப்பு!
ஊரில் அடிக்கடி நடக்கும் செயின் பறிப்புக்குக் காரணம் வெறும் நகைத் திருட்டல்ல, வேறு ஒரு பெரிய பின்புலம் என்ற சஸ்பென்ஸும், ரவி தன் உடலில் பொருத்தப்பட்ட சிப்பைக் கண்டுபிடித்தபின் அது அரவிந்தசாமிக்கு தெரியக்கூடாது என்பதால் நயன்தாராவிடம் கோபம் போல காட்டி கட்டியணைத்து காதல் புரிவதும் (சு) திரைக்கதை(பா)யின் ஜொலிஜொலிப்பு!
வசனம் கத்திமுனை!
வில்லனின் அப்பாவாக தம்பி ராமய்யா, அந்த அப்பாவித்தனமும் மெல்லிய தவிப்பும் அபாரம்யா!
ஜெயம் ரவியின் நண்பர்கள் ஓகே. அதில் ஒருவரின் கொலையை இத்தனை கொடூரமாகக் காட்டியிருக்க வேண்டாம்.
ராம்ஜியின் ஒளிப்பதிவும் ஹிப்ஹாப் தமிழனின் ஆர்ஆரும், கோபி கிருஷ்ணாவின் எடிட்டிங்கும் தனித்துத் தெரிகிறது.
ராஜாவுக்கு ஓர் அன்புக் கட்டளை! இனி டப்பிங் படங்களுக்கு டாட்டா காட்டிவிட்டு தனி ஒருவனாக இதேபோல் படம் எடுங்கள்!
தனி ஒருவன், க்ரியேட்டிவ்!
குமுதம் ரேட்டிங் - நன்று





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!