
தள்ளிப்போகும் தனி ஒருவன் 2?
மே 25, 2024
Advertisement
கடந்த 2015ம் ஆண்டில் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்து வெளிவந்த படம் "தனி ஒருவன்". இதன் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதிலும் ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடிக்கின்றனர். வில்லனாக ஹிந்தி நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என கூறப்பட்டது. தற்போது படத்தின் பட்ஜெட் அதிகரிப்பு தொடர்பான பிரச்னையால் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி போவதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!