கதைச் சுருக்கம்
குமுதம் சினி விமர்சனம்
இது என்ன மாயம்
அமலாபாலின் வீட்டுக்காரர் விஜய் இயக்கிய லேட்டஸ்ட் படம் எப்படி இருக்கும்? இதிலென்ன சந்தேகம்? லவ் ஸ்டோரிதான்!
டிரெய்னிங் கொடுத்து காதலுக்காக ஏங்குபவர்களை ஒன்று சேர்க்கும் கலகலப்பான பிசினஸை செய்கிறான் ஹீரோ. ஏகப்பட்ட பணத்துடன் ஒருவன், ஒரு பெண்ணைக் காதலிக்க உதவி கேட்கிறான். அந்தப் பெண் ஹீரோவின் காதலி! அப்புறம் என்ன ஆச்சு என்பதுதான் இது என்ன மாயம்.
ஆக்ஷனிலிருந்து காதலுக்கு தாவியிருக்கிறார் விக்ரம்பிரபு. இதயம் முரளி டைப் பாத்திரம் ஓகே.
கீர்த்தி சுரேஷ், பழைய ஹீரோயின் மேனகாவின் புத்திரி. மார்டன் தோற்றமும், சிரிக்கும்போது விழும் உதட்டுச் சுழியும் அள்ளுகிறது. (ஓர் அறிவு பூர்வமான ஆராய்ச்சி; அம்மாவுக்கு உதட்டின் மேல் அழகு மச்சம் என்றால் பெண்ணுக்குத் தாடையில் அதே மச்சம்) ஆனால் நிறுத்தி நிதானமாகப் பேசுவது ஏனோ?
நவ்தீப் ஸ்மார்ட்.
கொஞ்ச நேரம் வந்தாலும் சார்லியும், நாசரும் தாங்கள் சீனியர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
படத்தின் பெரிய பலம் ஜி.வி. பிரகாஷின் ரொமான்டிக் பாடல்களும், நிரவ்ஷாவின் சேம் கேமராவும்!
சில காட்சிகள் ரிப்பீட் ஆவதும், ட்ராமா மாதிரி படம் போவதும் கொஞ்சம் நெளிய வைக்கிறது.
இ.எ.மா.: காதலர்களுக்காக
குமுதம் ரேட்டிங் : ஓகே













வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!