கதைச் சுருக்கம்
----------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
கண்ணுக்கு நேராக இருப்பது மட்டும்தான் தெரியும். பக்கவாட்டில் இருப்பது நடப்பது எதுவும் தெரியாது. அப்படிப்பட்ட கண் நோயால் பதிக்கப்பட்டவர் விதார்த்.
அவர் வசிக்கும் அப்பார்ட்மெண்டில் எதிர் வீட்டில் குடியிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ். அவரைப் பார்க்க முதலாளி ரகுமானும் காதலர் அருணும் அடிக்கடி வந்து போகிறார்கள். திடீரென்று ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தக் கொலையைச் செய்தது ரகுமானா? காதலனா? வேறு யாராவதா?
இந்தக் கொலையைப் பயன்படுத்தி தன் கண் அறுவை சிகிச்சைக்கான பணத்தை கறக்கப் பார்க்கிறார் விதார்த்.இந்தச் சிக்கலை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் மீதிக்கதை.
இந்தக் கொலையைச் செய்தது யார்? யாருக்குத் தண்டனை? யாருக்கு ஆதாயம்? இதைச் சொல்வதல்ல இந்தப் படம். ஒரு குற்றம் மூலம் ஒருவரின் மனசாட்சி அவருக்கு என்ன தண்டனை கொடுக்கிறது என்பதைச் சொல்லும் படம்.
பார்வைக் கோளாறு அது தரும் வருத்தம், அதைவிட, அதை மற்றவர்களிடமிருந்து மறைக்க விதார்த் படும்பாடு, சிகிச்சைக்காக பணத்தைத் திரடட எடுத்துக் கொண்ட அக்கறை, குற்ற உணர்வுக்காக கண் கலங்குவது. தப்பிலும் ஒருநேர்மை, இரக்க குணம் என்று விதார்த் விதவிதமான நடிப்பை வழங்கியுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் கொஞ்ச நேரம் என்றாலும் மனதில் நிற்கிறார் பூஜா தேவரியா பொருத்தமான வார்ப்பு. ரகுமான் கதைக்கு வலு சேர்க்கிறார். குருசோமசுந்தரமும் நாசரும் மனதில் பதிகிறார்கள்.
எது தேவையோ, அதுவே தர்மம்! என சினனச் சின்ன வசனங்கள் கதையைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.
இளையராஜாவின் இசையும் இயக்குநர் மணிகண்டனின் ஒளிப்பதிவும் பெரிய ப்ளஸ்.
சுறுசுறுப்பில்லாமல் நகரும் கதை, கிளைமாக்ஸில் ஏற்பட்ட குழப்பம், லட்சங்களில் பணம் கைமாறுதல், குற்றம் சாட்டப்ட்ட அருண் குடும்பத்தாருடன் நடக்கும் பேரம், இதையெல்லாம் கண்டுகொள்ளாத போலீஸ் விசாரணை என்று நேர்த்தியற்ற திரைக்கதையால் படம் உச் கொட்ட வைக்கிறது.
கு.த.: துணிச்சல்!
குமுதம் ரேட்டிங் : ஓகே

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.