கதைச் சுருக்கம்
@@
-----------------------------------
கல்கி விமர்சனம்
அப்பாவின் காதலால் ஒளி இழந்துபோன வீட்டுக்கு, மகனின் காதல் விளக்கேற்றி வைப்பதுதான் சிக்குபுக்கு-படத்தின் கதை.
அப்பாவின் காதல் குல்பி ஐஸ் கணக்காக குளுகுளு கவிதையெனில், மகனின் காதல் காக்டெயில் போதை. அப்பா, மகன் இரட்டை வேடத்தில் "யார்யா இது ஆர்யாவா! என ஆச்சர்யம் மின்னமின்னி பிரகாசிக்கிறது. ஃப்ளாஷ் பேக்கில் விரியும் அப்பாவின் காதலில் ரசனையான சம்பவங்கள் மனத்துக்கு இனிப்பு. அப்பாவின் காதலியாக (மீனாள் பாத்திரத்தில்) ப்ரித்தி நடிப்பதற்கு ஏகப்பட்ட ஸ்கோப் அதையும் அவர் சரிவர செய்திருப்பதில் மனசுக்குள் நிற்கிறார். எப்போதும் போல சந்தானம் அண்ட் கோ நிகழ்த்தும் காமெடியில் வயிறு டரியல் ஆகிறது. ப்ரித்தியின் முறை பையனாக நடித்திருக்கும் அனூப், தம் காதல் கைக்கூடாதோ என்று புழுங்கி அழுகையில் ஏகப்பட்ட அனுதாபத்தைச் சம்பாதிக்கிறார். இவ்வளவு பாத்திரங்களுக்கு மத்தியில் ஸ்ரேயா, பாடல்களில் மட்டும் பளிச்சிடுவதால் சுத்தமாக அவரால் சோபிக்க முடியவில்லை.
கே.பி.குருதேவ் கேமராவைப் போலவே கலோசியல் கஸின்ஸ், ஹரி-லெஸ்லியின் இசையும் சோபிக்கவில்லை. அப்பாவின் காதலி (ப்ரித்தி) மகளான ஸ்ரேயாவை மகன் ஆர்யா காதலிப்பதாகக் காண்பிப்பதிலும் அதற்கு ப்ரித்தி சம்மதிப்பதும் கதையின் மிகப்பெரிய லாஜிக் ஓட்டை. ஃப்ளாஷ்பேக் போகும்போது மெயின் கதையும், மெயின்கதையிலிருந்து ஃப்ளாஷ்பேக்குமென கதைமாறிமாறிப் பயணிப்பதால் சாதாரண ரசிகன் குழம்பித்தான் போவான். இயக்குனர் மணிகண்டன் கதையில், திரைக்கதையில் விழுந்திருக்கும் இந்த "டொங்கனை சரி செய்திருக்கலாம்.
சிக்குபுக்கு- காதல் கலாட்டா

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.