கதைச் சுருக்கம்
அ நிறம் | அளவு
கொலை ஒன்று நிகழ்கிறது. பல பேர் மீது சந்தேகம். எதிர்பாராத ஒருவரைக் கொலையாளி எனச் சொல்லி அதிர்ச்சியளிக்கும் அந்த நாள் உத்தி இந்த நாள் கதகளியில் இடைவேளையின் போதும் சண்டைக் காட்சிகளின்போது கதகளி கதகளி என்று உறுமல் சத்தம் கேட்பதைத் தவிர தலைப்புக்கும் படத்துக்கும் ஏதொரு சம்பந்தமும் கண்டிட்டில்லா.
சீரியல்களைப் பார்ப்பவர்கள் ஒன்றைக் கவனித்திருப்பீர்கள்... ஏதாவது சம்பவம் ஒன்று ஒரு கதாபாத்திரத்துக்குத் தெரியவரும். அந்தப் பாத்திரம் அதை இன்னொருவருக்குச் சொல்லும். அதே செய்தி, ஃபோன் மூலம் இன்னொருவருக்குப் போகும். இப்படி கஜக்கோல் ஜவ்வாக இழுப்பார்கள். சீரியலுக்கு அது சரிதான். ஆனால் திரைப்படத்திலும் அதே பாணியைக் கடைப்பிடித்தால், பார்ப்பவர்கள் பாவம்.
இடைவேளைக்கு முன்பு வரையாவது கதாநாயகி கேத்ரின் தெரசாவும் கருணாஸும் கொஞ்சம் சுவாரசியத்தை ஏற்படுத்துகிறார்கள். இடைவேளைக்குப் பின்னர் பலவிதமான வில்லன்கள் - கதாநாயகன் விஷாலையும் சேர்த்து - படுத்தி எடுக்கிறார்கள்.
இன்னொரு சங்கமா? எனறு அதிர்ச்சியுடன் கருணாஸ் கேட்கும்போது விவரமான ரசிகர்கள் உள்குத்தை சிலாகித்து லேசாகச் சிரிக்கிறார்கள். ஆரம்பக் காட்சிகளில் மீனவர் பிரச்னை அலசப்படுகிறது. அடடே என்று அவசரமாக ஆச்சரியப்பட்டு விடாதீர்கள். இது சென்னை மற்றும் கடலூர் மீனவர்களுக்கிடையேயான பிரச்னையாம். என்னே ஒரு பாதுகாப்பு உணர்ச்சி!
நகைச்சுவை என்ற பேரில் யோகாவைக் கிண்டல் அடிக்கிறார் கருணாஸ். ரசிக மகா ஜனங்களும் சிரித்து வைக்கிறார்கள். பூங்காவில் கருணாஸ் பலூன் ஊதும் காட்சியும், மருந்துக் கடையில் வேலைசெய்யும் கதாநாயகியிடம், கதாநாயகன் கேட்கும் வஸ்துவும் விரசம்! பல்லைக் கடித்துக் கொண்டே பேசுவதைப் போன்ற பெண் பின்னணிக் குரலைக் கேட்டு கேட்டுப் புளித்துப்போன ஒன்று.
கதாநாயகியின் காபூல் திராட்சைக் கண்கள் அழகோ அழகு! விஷால் சண்டைக் காட்சிகளில் அதகளம்! உண்மைக்குப் பயப்படுறவன் ஒருத்தருக்கும் பயப்படமாட்டான் என்பது போன்ற பளிச் வசனங்கள் ஆங்காங்கே. போலீஸ் ஒருபுறம் துரத்த, வில்லன்கள் மறுபுறம் துரத்த, கதாநாயகனின் பதற்றம் பார்ப்பவர்களையும் தொற்றிக் கொள்கிறது. சண்டை ஒன்றின்போது அடிவாங்குபவரின் பல் தனியே பறந்து செல்வது திலூட்டுகிறது.
கதகளி: ஜவ்வுக்களி!

Advertisement
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!