/பிற மாநில தமிழர்/பிற மாநிலம்/நாசிக் பஞ்சவடியில் தைப் பூசம் பெருவிழாநாசிக் பஞ்சவடியில் தைப் பூசம் பெருவிழா
நாசிக் பஞ்சவடியில் தைப் பூசம் பெருவிழா
நாசிக் பஞ்சவடியில் தைப் பூசம் பெருவிழா
நாசிக் பஞ்சவடியில் தைப் பூசம் பெருவிழா
பிப் 12, 2025

நாசிக் பஞ்சவடியில் உள்ள கார்த்திக் ஸ்வாமி கோயிலில் இந்த வருட தைப் பூசம் பெருவிழா மிக விமர்சையாகநடைபெற்றது. காலையில் முருக பக்தர்கள் கோதாவரி நதி கரையிலிருந்து முருகப் பெருமானுக்கு பால்குடக்காவடி எடுத்து வந்தனர். பின்னர் அனைத்துவித அபிஷேகங்கள் நடைபெற்றது. பக்தர்கள் முருகப் பெருமானுக்கு திருப்புகழ், சஷ்டி கவசங்கள் பாடி ஆன்மீகத்தில் திளைத்தினர்.
பின் கந்த பெருமானுக்கு தீபாராதனை நடைபெற்றது. பக்த கோடிகள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்த கார்த்திக் ஸ்வாமி திருக்கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார் நிர்வாகிகள் தைப்பூசத்தை முன்னிட்டு மிகச்சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் பா.ஸ்ரீதர்