Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/பிற மாநிலம்/நாசிக் தமிழ்ச் சங்கம் சார்பில் தைப்பொங்கல் விழா

நாசிக் தமிழ்ச் சங்கம் சார்பில் தைப்பொங்கல் விழா

நாசிக் தமிழ்ச் சங்கம் சார்பில் தைப்பொங்கல் விழா

நாசிக் தமிழ்ச் சங்கம் சார்பில் தைப்பொங்கல் விழா

பிப் 05, 2025


Latest Tamil News
நாசிக் தமிழ்ச் சங்கம் சார்பில் தைப்பொங்கல் விழா இனிதே நடைபெற்றது. விழாவில் சொக்கலிங்கம் (மாநில தேர்தல் ஆணையர் மகாராஷ்டிரா) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை பெருமைப்படுத்தினார். காலையில் நாசிக் தமிழ் தமிழ் சொந்தங்கள் ஒன்றாக இணைந்து தமிழ் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து சூரிய வழிபாடும் செய்தனர் அதன் பின்னர் உறியடி போட்டி நடைபெற்றது.

அதன் பின்னர் நாசிக் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ்த்தாய் வாழ்த்து உடன் துவங்கிய இந்த கலை நிகழ்ச்சிகள் பரதநாட்டியத்துடன் அனைத்தும் மிகச் சிறப்பாக வெகு விமர்சியாகவும் நடைபெற்றது. பாரதியார் கவிதைகள், திருக்குறள் ஒப்புவித்து மற்றும் பல நிகழ்ச்சிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். விழாவில் தமிழ்ச் சங்கத் தலைவர் ராமமூர்த்தி பேசுகையில் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நடத்தும் விழா மிகச் சிறப்பாக நடந்துள்ளது மேலும் தமிழ் சொந்தங்கள் அனைவரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தமிழர் நலம் காக்க இச்சங்கம் விளைகின்றது என்று கூறினார். சொக்கலிங்கம் இ. ஆ.ப பேசுகையில் அனைத்து நாசிக் குழந்தைகளும் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் எழுதத் தெரிந்திருக்க வேண்டும் அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.


கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசினை வழங்குவது இதுவே முதல் தடவை அதுவும் தினமலர் நாளிதழ் இணைந்து இந்த பரிசினை வழங்கியது மிகப் பெருமைக்குரிய விஷயம். இந்த விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தினமலர் பத்திரிகை சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பு பரிசினை பெற்ற குழந்தைகள் அனைவரும் மிக்க மகிழ்வோடு பெற்றுக்கொண்டனர். மேலும் கலந்து கொண்ட அனைத்து தமிழ் சொந்தங்களுக்கு டாக்டர் கே ராமச்சந்திரன் நன்றி கூறினார். விழாவினை பா. ஸ்ரீதர் தொகுத்து வழங்கினார்.


இந்த விழா மிக வெற்றியுடன் மற்றும் மிகச் சிறப்பாக நடைபெறுவதன் காரணம் அனைத்து நிர்வாக மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கடினமான கூட்டு முயற்சியே காரணம். அனைவருக்கும் சுவையான மதிய உணவுடன் மாத நாட்காட்டி வழங்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் திருவிழாவில் கலந்து கொண்டு அதைப் போன்ற உணர்வு என்று மகிழ்வாய் தமது இல்லங்களுக்கு திரும்பினர்.


- நமது செய்தியாளர் பா ஸ்ரீதர்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us