/பிற மாநில தமிழர்/பிற மாநிலம்/புதிய இஸ்ரோ தலைவருக்கு நாசிக் தமிழ்ச் சங்கம் வாழ்த்து புதிய இஸ்ரோ தலைவருக்கு நாசிக் தமிழ்ச் சங்கம் வாழ்த்து
புதிய இஸ்ரோ தலைவருக்கு நாசிக் தமிழ்ச் சங்கம் வாழ்த்து
புதிய இஸ்ரோ தலைவருக்கு நாசிக் தமிழ்ச் சங்கம் வாழ்த்து
புதிய இஸ்ரோ தலைவருக்கு நாசிக் தமிழ்ச் சங்கம் வாழ்த்து
ஜன 09, 2025

ராக்கெட் மற்றும் விண்கல உந்துவிசை வல்லுநரான முனைவர் வி.நாராயணன், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்(இஸ்ரோ) அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவன் ஏற்கனவே இஸ்ரோ தலைவராக பதவி வகித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பின் மூலம் மீண்டும் ஒரு தமிழர் இஸ்ரோ தலைவராகிறார். இஸ்ரோவின் 11-வது தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலக்காட்டுவிளை என்ற கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்ற நாராயணன் இஸ்ரோ தலைவராக உயர்ந்துள்ளார். இது உலகத் தமிழர்களின் மிகப் பெருமைக்குரிய ஒன்றாகும்.
புதிய இஸ்ரோ தலைவர் நாராயணனை நாசிக் தமிழ்வாழ் மக்கள், நாசிக் தமிழ்ச் சங்க நிர்வாகக்குழு வாயிலாக தங்களின் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர். உலக அரங்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையம் மேலும் பற்பல சாதனைகள் புரியும் என்பது நிதர்சனமான உண்மை... தலைமைப் பொறுப்பேற்கும் தமிழர் மூத்த விஞ்ஞானி நாராயணனுக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துக்களை தினமலர் நாசிக் செய்தியாளர் மூலமாகவும் பகிர்ந்து கொள்கிறோம்
- நமது செய்தியாளர் பா. ஸ்ரீதர்