Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/பிற மாநிலம்/நாசிக் தமிழ் கூட்மைப்பு சார்பில் ரத்ததான முகாம்

நாசிக் தமிழ் கூட்மைப்பு சார்பில் ரத்ததான முகாம்

நாசிக் தமிழ் கூட்மைப்பு சார்பில் ரத்ததான முகாம்

நாசிக் தமிழ் கூட்மைப்பு சார்பில் ரத்ததான முகாம்

ஜன 08, 2025


Latest Tamil News
நாசிக் நகரில் Nashik Tamil Federation சார்பில் இரத்த தானம் முகாம் சிறப்பாக நடைபெற்றது. நாசிக் சிவில் மருத்துவமனையின் மெட்ரோ குருதி வங்கியுடன் இணைத்து நடைபெறவிருக்கும் இக் குருதி முகாமினை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு விருந்தினர்களாக Ramamurthy (President Tamil Sangam Nashik), Kiran mohite, Maulana Salahuddin, Saddam Akhil Syed (journalist), Irfan Pathan (journalist), Sajid Jafar Shaik (journalist), Shoaib Salim Shaikh (journalist), Wasim Pathan (human rights), Zubair Hashmi Zakir Hussain (hospital) கலந்து கொண்டு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

மூன்று மகளிர் உட்பட 54பேர் ரத்ததான முகாமில் பங்கேற்றனர். மௌலானா சலாகுத்தீன், (தொழுகை தலைவர், அஹ்மத் ரஸா மஸ்ஜித்) வழிகாட்டுதலின்படி இந்த இரத்ததானம் இரண்டாவது வருடமாக சிறப்பாக நடத்தப்படுகிறது.


மகத்தான மருத்துவ சேவையில் அனைவரும் கலந்து கொண்டு உயிர் காத்து தானும் நலம் பேணி காத்திட நாசிக் மக்களுக்கு நற்பணி என்பதில் ஐயமில்லை. மேலும் குருதி முகாமிற்கு தமிழ் சங்கம் மற்றும் பல அமைப்புகள் வாழ்த்தினை தெரிவித்து கொண்டுள்ளது.


நாசிக் தமிழ் அமைப்பு மேலும் பல பல திட்டங்களை, சேவைகளை முன்னிருத்தி மக்கள் நலனுக்காக செயல்பட்டு வருகின்றது.


- நமது செய்தியாளர் பா. ஸ்ரீதர்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us