Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/புதுடில்லி/டில்லி ஸ்ரீ வரத கணேசர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா

டில்லி ஸ்ரீ வரத கணேசர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா

டில்லி ஸ்ரீ வரத கணேசர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா

டில்லி ஸ்ரீ வரத கணேசர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா

செப் 11, 2024


Latest Tamil News
தாஹிர்பூர் தில்லியில் பக்தர்கள் விக்னங்களை களைந்து , வேண்டும் வரங்களை வாரி வழங்கி அருள்பாலித்து வரும் ஸ்ரீ வரத கணேசருக்கு சதுர்த்தி பெருவிழா இவ்வாண்டும் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது . பத்து நாட்கள் ஆலய புரோகிதர்கள் நடத்திய தினசரி வெவ்வேறு கணபதி ஹோமம் மற்றும் ஸ்ரீ வரத கணேசனுக்கு நடந்த அபிஷேக ஆராதனைகள் மற்றும் அலங்காரங்கள் பார்த்த பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர்.

சதுர்த்தி பெருவிழா அன்று இவ்வாண்டும் காலையிலிருந்து ஆலயத்தில் மக்கள் வெள்ளம் அலை மோத ஸ்ரீ வரத கணேசருக்கு விஷேச கலச பூஜை மற்றும் ஆலய பண்டிதர்கள் (பெயருடன்) நடத்தி வைத்த மகாராஜா கணபதி ஹோமம் தொடர்ந்து 16 திரவிய அபிஷேகத்தில் திளைத்த முழுமுதற் கடவுள் வெள்ளி கவசத்தில் காட்சி அளித்து அருள் பாலித்தார் . மாலை வேளையில் மழை சிறு பன்னீர் துளிகளை தெளிக்க , பண்டிதர்கள் மந்திர ஆராதனையும் மங்கையர்கள் சிறு பால விநாயகரை மலர்களால் அலங்கரித்து கரங்களில் ஏந்தி, அம்மன் குடம் கரகாட்டம் மேள வாத்தியங்கள் முழங்க வண்ண விளக்குகள் ஜொலிக்கும் அலங்கார தேரில் ஆனைமுகன் வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது காண்பவர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. ஆலய நிர்வாகத்தினர் , ஆலய புரோகிதர்கள் மற்றும் அனைத்து ஆன்மீக உறவுகள் உறுதுணையோடு இவ்வாண்டும் கணேஷ் சதுர்த்தி பெருவிழா நடந்தேறியது.


- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us