/பிற மாநில தமிழர்/புதுடில்லி/சித்தி புத்தி கற்பக விநாயகர் திருக்கல்யாணம்சித்தி புத்தி கற்பக விநாயகர் திருக்கல்யாணம்
சித்தி புத்தி கற்பக விநாயகர் திருக்கல்யாணம்

செப் 09, 2024

புதுடில்லி சரோஜினி நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில், விநாயக சதுர்த்தி மஹோத்ஸவம் கடந்த பத்து நாட்கள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆகஸ்ட் 28ம் தேதி, மஹான்யாச ஏகவார ருத்ராபிஷேகத்துடன் தொடங்கி செப். 8 வரை சித்தி புத்தி கற்பக விநாயகர் திருக்கல்யாண வைபவத்துடன் முடிவடைந்தது. மஹோத்ஸவத்தை ஒட்டி, தினமும் காலை கேதார சாஸ்திரிகள் தலைமையில் சிறப்பு கணபதி ஹோமமும், மாலையில் சதுர்வேத பாராயணமும் நடைபெற்றது.
செப். 1 விநாயகப் பெருமானுக்கு மஹன்யாச ஏகாதச ருத்ராபிஷேகம் மற்றும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. விநாயக சதுர்த்தியன்று, மஹன்யாச ஏகவார ருத்ராபிஷேகத்துடன் துவங்கி, காலை மற்றும் மாலையில் விநாயக சஹஸ்ரநாமம், ஸ்வர்ண அஷ்டோத்ரம் மற்றும் மகா ஆரத்தியுடன் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு ஆரத்தி மற்றும் பிரகார உற்சவம் நடத்தப்பட்டது.
ஜே. ராமகிருஷ்ணன் பாகவதர், சுனில் பாகவதர், ஓ.வி. ரமணி பாகவதர், சூடாமணி பாகவதர் மற்றும் அவர்களது குழுவினரால் சித்தி புத்தி கற்பக விநாயகர் திருக்கல்யாண வைபவம் நடத்தி வைக்கப்பட்டது. பக்தர்கள் திரளாக இதில் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்