Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/புதுடில்லி/தில்லி தமிழ்ச் சங்கத்தில் சிறப்பு நிகழ்வுகள்

தில்லி தமிழ்ச் சங்கத்தில் சிறப்பு நிகழ்வுகள்

தில்லி தமிழ்ச் சங்கத்தில் சிறப்பு நிகழ்வுகள்

தில்லி தமிழ்ச் சங்கத்தில் சிறப்பு நிகழ்வுகள்

மே 20, 2024


Latest Tamil News
தில்லி தமிழ்ச் சங்கத்தில் இரு பெரும் நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை ( மே18தேதி) நடைபெற்றது.

சேவையாளர்களுக்கு கவுரவம்


முதலாவதாக தமிழ்ச்சங்கம் , மற்றும் எச் எஸ் சி சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற செயலர் வி.எஸ்.கிருஷ்ணனின் பங்களிப்புடன் சமூக ஆர்வலர்கள், அமைப்புக்கள் ,சங்கீத அறிஞர்கள், இறைபணி செய்பவர்கள் என பல துறைகளில் தன்னலமற்ற சேவை செய்பவர்களை தேர்ந்தெடுத்து கெளரவித்தார்கள் .இதில் சென்னை உபன்யாசகர் தாமல் இராமகிருஷ்ணன், ஆன்மீக பேச்சாளர் கிருஷ்ண கிருபா, மாதா புற்றுநோய் மையத்தின் மருத்துவர் டாக்டர் விஜய ஸ்ரீ, சிவானந்த குருகுல அறக்கட்டளை, அர்ச்சகர் ராமன், தில்லி சகஸ்ரநாம சத்சங்கம் சார்பில் சுப்ரமணியம், மறைந்த மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன், ஸ்ரீ சுவாமிநாத சேவா சமாஜ் சார்ந்த மறைந்த பட்டாபி ராமன் ஆகியோருக்கு வாழ்த்து பத்திரம் மற்றும் பணமுடிப்பு கொடுக்கப்பட்டது.

புத்தக வெளியீட்டு விழா

இரண்டாவது நிகழ்வு புத்தக வெளியீட்டு விழா. ஆஸ்திரேலியா வாழ் தமிழர், வழக்குரைஞர் சமூக ஆர்வலர் முனைவர் சந்திரிகா சுப்பிரமணியம் எழுதிய இரு பெரும் புத்தகங்கள் .ஒன்று தமிழில் கம்பனின் பக்தியும் காதலும்.இரண்டாவது ஆங்கிலத்தில் கிளிம்சஸ் ஆஃப் கம்ப ராமாயணம் என்ற அற்புதமான படைப்புக்கள்.


நூலை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் ராமசுப்ரமணியன் வெளியிட சிறப்பு விருந்தினர் தினமணி முதன்மை ஆசிரியர் வைத்யநாதன் பெற்றுக்கொண்டார்.முன்னதாக கம்பராமாயணம் பற்றி கம்பனின் கவித்திறம் பற்றி தலைநகர் சிந்துகவி சேதுராமலிங்கம் பேசினார்கள். தொடர்ந்து நீதியரசர் ராமசுப்ரமணியன் கம்பனின் ஆங்கில புத்தகம் பற்றிய சிறப்பு பகுதிகளை சுட்டிக்காட்டி அதில் வரும் கவிதைகள் எழுத்தாளரின் பார்வை என் பாராட்டி பேசினார்கள். முக்கியமாக வ.வே.சு அய்யாவின் ஆங்கில புத்தகத்திற்கு பிறகு தற்போது சந்திரிகாவின் கம்பன் பற்றிய ஆங்கில புத்தகம் தில்லி தமிழ்ச் சங்கத்தில் தான் வெளியிடப்படுகிறது என்ற அறிய செய்தியை கரகோஷத்துடன் பகிர்ந்து கொண்டார். தினமணி முதன்மை ஆசிரியர் வைத்யநாதன் வாழ்த்தி பேசினார்கள்.ஏற்புரையில் எழுத்தாளர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

தமிழ் சங்கம் சார்பில் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் கெளரவிக்கப்பட்டனர். விழாநிகழ்வுகளை தமிழ் சங்க இணை செயலர் உமா சத்யமூர்த்தி பொருளாளர் அருணாசலம் தொகுத்து வழங்கினார் கள். தமிழ்சங்க கமிட்டி உறுப்பினர் அமிர்தலிங்கம் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது


- நமது செய்தியாளர் மீனா வெங்கி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us