ஆக 19, 2024

புது டில்லி லோதி சாலையில் அமைந்துள்ள ரமண கேந்திரா மையம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சத்சங்கம் நடத்தி வருகின்றனர். ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெற்ற சத்சங்கத்தில் சமகம் மற்றும் ருத்ர பாராயணத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஜெயந்தி ஐயர் அக்ஷரமணமாலை பற்றிய சொற்பொழிவு நடத்தினர். இதையடுத்து, நீரஜ் குப்தா தியானம் பற்றி வழிகாட்டினார். ஆன்மிக அன்பர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்