Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/புதுடில்லி/நொய்டா கோவிலின் 'பிரதிஷ்டா தினம்'

நொய்டா கோவிலின் 'பிரதிஷ்டா தினம்'

நொய்டா கோவிலின் 'பிரதிஷ்டா தினம்'

நொய்டா கோவிலின் 'பிரதிஷ்டா தினம்'

செப் 05, 2024


Latest Tamil News
நொய்டா செக்டார் 22 ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயில் பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு 'ருத்ராபிஷேகம்', கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. மாலையில் ஸ்ரீ வரசித்தி விநாயகரை வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கப்பட்டது. அனைத்து ஹோமங்களும் மற்றும் பூஜைகளும் ஸ்ரீராம் வாத்தியார் தலைமையில் ஜெகதீஷ் சிவாச்சாரியார் உதவியுடன் நடந்தன.

மாலையில் ருக்மணி மகாலிங்கம் அவர்களின் வழிகாட்டுதலில், சிறிய இளம் திறமையாளர்களான பி.எஸ்.வைபவி மற்றும் பிரணேஷ் ஆகியோர், கணபதிப் பெருமானைப் பற்றிய ஆன்மிகச் சொற்பொழிவை நிகழ்த்தினர். சீனியர் உறுப்பினர் Wg Cdr சந்திரசேகர், சிறிய இளம் திறமைகளை சிறப்பாக பாடியதற்காக பாராட்டினார், ரவி சர்மா மற்றும் வேதமூர்த்தி ஆகியோர் சிறு குழந்தைகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினர்.


நொய்டா செக்டார் 62 ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோவில் வளாகத்தில் 'சாம வேத' பக்தர்களுக்கான உபகர்மா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை பிரம்மஸ்ரீ ஸ்ரீராம் வாத்தியார் நிகழ்த்தினார். 20 பக்தர்களுக்கும் மேலாக கோயிலுக்குச் சென்று பூணூல் மாற்றிக் கொண்டனர்.


நொய்டாவில் உள்ள பழமையான இக்கோவிலில் ஸ்ரீ வரஸித்தி விநாயகர் 'மூர்த்தி சிறியதாக இருந்தாலும், கீர்த்தி பெரிது' 'தெய்வீக சக்தி' உள்ள இந்த பிள்ளையாரை காண, நொய்டா மட்டுமின்றி சுற்றுப்புறத்தில் இருக்கும் இடங்களிருந்தும், கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்கள் தரிசனத்திர்க்கு, அன்றிலிருந்து இன்று வரை வந்து கொண்டிருக்கிறாரகள், என்பது குறிப்பிடத்தக்கது. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பக்தர்களுக்கு சேவை செய்து வரும், இந்த ஆலயம், வேதிக் பிரசார் சன்ஸ்தானால், நிர்வகிக்கப்படுகிறது.


- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us