Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ஆன்மீகம் மற்றும் கலாச்சார அமைப்புகளுக்கு, தில்லியில் விருது

ஆன்மீகம் மற்றும் கலாச்சார அமைப்புகளுக்கு, தில்லியில் விருது

ஆன்மீகம் மற்றும் கலாச்சார அமைப்புகளுக்கு, தில்லியில் விருது

ஆன்மீகம் மற்றும் கலாச்சார அமைப்புகளுக்கு, தில்லியில் விருது

செப் 04, 2024


Latest Tamil News
தலைநகர் / NCR ல் 25 / 50 / மற்றும் 75 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் ஏராளமான கலாச்சார மற்றும் ஆன்மீக அமைப்புகள் உள்ளன என்பதை நாம் எல்லோரும் அறிவோம். எந்த ஒரு தனிப்பட்ட ஆதாயத்தையும் குறிக்கோளாகக் கொள்ளாமல், இரவு பகலாக உழைத்த சில உறுப்பினர்கள் நேர்மையான கடின உழைப்பால் மட்டுமே இந்த அமைப்புகள் தோன்றி அரும்பணி ஆற்றி வருகின்றனர்.
ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட அலுவல்களுக்கிடையே மகத்தான சேவையை ஆற்றி இருப்பதற்கு நமது பாராட்டுகளை சமர்ப்பிப்பதில் பெருமை கொள்கிறோம். ராமகிருஷ்ணபுரம் தென்னிந்தியச் சங்கம், ஒட்டுமொத்த சமுதாய முன்னேற்றத்திற்கு உதவும் அந்த மகான்களை அங்கீகரித்து, தில்லித் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன், ஆர்.கே.புரம். தென்னிந்தியச் சங்கம், தலைநகர் மற்றும் அண்டை பகுதிகளில் உள்ள பல்வேறு கலாச்சார மற்றும் கலாச்சாரத்தை கௌரவித்தது.

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சி எஸ் வைத்தியநாதன் தலைமை வகித்து, சான்றிதழ்களை வழங்கினார். கூட்டத்தில் உரையாற்றிய வைத்தியநாதன், பங்கேற்பாளர்கள் மற்றும் வாழ்நாள் விருது பெற்ற அனைவரையும் பாராட்டினார். மேலும், இது போன்ற சேவைகள் அடுத்த தலைமுறையினரும் தொடர வேண்டும் என விரும்பினார். தமிழ்ச் சங்கத் தலைவர் யு பெருமாள் நன்றி கூறினார்.


ஸ்ரீ சுவாமிநாத சுவாமி சேவா சமாஜ், முருகன் திருக்கோயில் (ஆர்.கே புரம்), பஜன் சமாஜ் (துவாரகா), தில்லித் தமிழ்ச் சங்கம், ஸ்ரீ விநாயகா மந்திர் கமிட்டி (சரோஜினி நகர்), வேதிக் கல்சர் சென்டர், ஸ்ரீராம் மந்திர் (லோதி ரோடு), சங்கர வித்ய கேந்த்ரா, ஸ்ரீ வைகுண்டநாதர் மந்திர் (பேர்சராய்), செளத் இண்டியன் சமாஜ் (சரோஜினி நகர்), ஸ்ரீ வெங்கடேஸ்வரா மந்திர் சொசைட்டி (ஆர்.கே. புரம்), ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கம் (ஆர்.கே புரம்), ராமகிருஷ்ணபுரம் செளத் இண்டியன் சொசைட்டி, சண்முகானந்த சங்கீத சபா, ஆஸ்திக சமாஜம், ஐஸ்வர்யா மகா கணபதி கோவில் (லாரன்ஸ் ரோடு) ஸ்ரீ கணேஷ் சேவா சமாஜ், ஸ்ரீ காருண்ய மகா கணபதி கோயில் (மயூர் விஹார் பேஸ் 2), ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம் (கரோல் பாக்) ஸ்ரீ ஆதி சங்கர சேவா சமாஜம் , ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோயில் (மயூர் விஹார் பேஸ் 3) ஸ்ரீ ராதா கல்யாண கமிட்டி, வேதிக் பிரசார் சன்ஸ்தான் ஆன்மீக அமைப்பின், ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில் (நொய்டா செக்டார் 22) , ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கம் (நொய்டா), தமிழ் இளைஞர் கலாச்சார சங்கம் (ரோகிணி), கே.எம்.எஸ் கலை உலகம் (லோதி ரோடு), தமிழர் நலக் கழகம் (மயூர் விஹார் பேஸ் 3), ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் தர்ம சாஸ்தா உத்தரவேதம் பூமி (க்யாலா விஷ்ணு கார்டன்), ஸ்ரீ உத்தர இந்திரபிரஸ்த வைதிக சமாஜம் (செக்டர் 22, நொய்டா), ஸ்ரீ முருகன் கோவில் (இந்திரபுரி), ஸ்ரீ மாரியம்மன் கோவில் (ஏ பிளாக், இந்தர்புரி), ஸ்ரீ மாரியம்மன் கோவில் (இ பிளாக், இந்தர்புரி), ஆகிய 'வாழ்வு' கொடுத்த ஆன்மீகம் மற்றும் கலாச்சார அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.


தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் வி. ராஜாராமன் தில்லித் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன், தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் ஓய்வு பெற்ற முதல்வர் எஸ். நடராஜன், குமார் கேட்டரர்ஸ் கே. குமார், சாந்தி கேட்டரர்ஸ் எஸ். ஐயப்பன், எஸ்.கே. ஆர். கேட்டரர்ஸ் ஆர். வெங்கட்ராமன் (பாலாஜி) ஆகியோருக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டது.


திருவிளக்கு ஏற்றலுடன் தொடங்கிய நிகழ்ச்சி, ராமகிருஷ்ணாபுரம் தென்னிந்திய சங்க தலைவர் ஆர் கே வாசன் வரவேற்றார். ஆர். முகுந்தன் , டெல்லி தமிழ் சங்கப் பொது செயலாளர் ஆர்.கே.முகுந்தன் நிகழ்ச்சி குறித்து விளக்கி, சங்க செயலாளர் எஸ். வெங்கடேஷை தலைநகரில் முதல் முறையாக இம்மாதிரியான நிகழ்ச்சி நடத்தினதுக்காக பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பல்வேறு கோவில் கமிட்டிகள், மத அமைப்புகள் மற்றும் வாழ்நாள் விருது பெற்றவர்களை ஆர் கே பி சொசைட்டியின் துணைத் தலைவர் எஸ் கிருஷ்ணசாமி பாராட்டினார்.


மேலும், இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ சுவாமிநாத சேவா சமாஜ நிர்வாகக் குழு உறுப்பினர் பி.சுவாமிநாதன், சண்முகானந்த சங்கீத சபை பொதுச் செயலாளர் எஸ்.கிருஷ்ணசாமி, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம சங்க நிர்வாக அறங்காவலர், டி.சுப்ரமணியன், ஆதி சங்கர சேவா சமாஜம் செயலாளர் கே.கோபாலகிருஷ்ணன், வேதிக் பிரச்சார சன்ஸ்தான் தலைவர் ரவி சர்மா ஆகியோர் தங்களது வெற்றி பயணத்தை எடுத்துரைத்ததனர் .


- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us