நாடு முழுவதும் 3 அக்டோபர் முதல் நவராத்திரி கொண்டாட்டம் கோலாகலமாக துவங்கியது.
நவராத்திரியை ஒட்டி, முதல் நாளன்று (3 அக்டோபர்) காலை புதுதில்லி, ஆர். கே. புரம், 1வது செக்டாரில் அமைந்துள்ள, ஸ்ரீ காஞ்சி காமகோடி கலாச்சார பீடம் மையத்தில் விக்னேஸ்வர பூஜையுடன் மஹோத்ஸவம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, மகா சங்கல்பம், புண்யாஹவசனம், கலச ஸ்தாபனம், கணபதி ஹோமம் மற்றும் நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலை 6.30 மணிக்கு, கலாச்சார நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, குருகுலம் அறக்கட்டளை, ஸ்ரீ காஞ்சி காமகோடி கலாச்சார பீடம் மையத்துடன் இணைந்து நடத்திய கர்நாடக இசைக் கச்சேரியில், வித்வான் அவந்த்ராஜ் குழுவினர் பங்கேற்றனர். உமா அருண் வயலினும் மற்றும் வி. சங்கர் ராமன் மிருதங்கமும் வாசித்தனர். இசைக் கலைஞர்களை ஸ்ரீ காஞ்சி காமகோடி கலாச்சார பீடம் மையம் சார்பில் சால்வை அணிவித்து கெளரவித்தனர்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்