
புதுதில்லி : சாலிமார் பாக்கில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் 3 அக்டோபர் அன்று நவராத்திரி விழா துவங்கியது. விழாவை முன்னிட்டு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வருக்கு விசேஷ அலங்காரம், சிறப்பு பூஜையும் நடந்தது. மாலையில் பக்தர்கள் கலந்து கொண்டு நடனமாடி, பஜனை பாடல்களை பாடினர். புவனா வெங்கடேஷின் பக்தி பாடல்களும் இதில் இடம் பெற்றது.
10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் கர்நாடக இசைக் கச்சேரிகள், பரதநாட்டியம், திருப்புகழ் பஜனை, அறக்கட்டளை விருதுகள், குழந்தைகள் தங்கள் பல்வேறு திறமைகளை காட்டும் கலை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
மக்களை துன்புறுத்திய மகிசாசூரன் என்ற அரக்கனுடன் ஆதிபராசக்தி ஒன்பது நாட்கள் போரிட்டு 10-வது நாள் வெற்றி கொண்ட சம்பவம் தான் நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழா நாட்களில் வீடுகள், கோயில்களில் பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்