Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ஸ்ரீ தேவி காமாட்சி கோவிலில் நவசண்டி ஹோமம்

ஸ்ரீ தேவி காமாட்சி கோவிலில் நவசண்டி ஹோமம்

ஸ்ரீ தேவி காமாட்சி கோவிலில் நவசண்டி ஹோமம்

ஸ்ரீ தேவி காமாட்சி கோவிலில் நவசண்டி ஹோமம்

அக் 13, 2024


Latest Tamil News
புதுதில்லி : ஏகாதசியை ஒட்டி, அசப் அலி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி காமாட்சி அம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஹோமம் மகா தேவியை மகிழ்விப்பதற்கும், வாழ்க்கையில் அவளது அதிர்ஷ்டத்தை வரவேற்கவும் மிகவும் சக்திவாய்ந்த வழியாகும். நவ சண்டி ஹோமத்தில், ஒரு யாகம் மின்னல், ஒரு தீ குண்டம் அல்லது யாகம், மந்திரங்கள் மற்றும் தேவியைப் போற்றுதல் ஆகியவற்றுடன் நடைபெறுகிறது. துர்கா சப்தசதியிலிருந்து சிறப்புப் பாடல்களைப் பாடியும், சண்டிதேவியின் மகிமையைப் போற்றியும் ஹோமம் நடத்தப்படுகிறது.

காலை கணபதி பூஜையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், ஸ்ரீ தேவி மகாத்மிய பாராயணம், மஹன்யாச பாராயண ஜபம் மற்றும் ஏகாதச ருத்ர ஜபம் நடைபெற்றது. ரித்விக்குகள் மற்றும் வேத விற்பன்னர்கள் பலர் பங்கேற்று ஜபம் செய்தனர்.


புண்யாஹவசனம், சங்கல்பம், கலச பூஜை, ஆவாஹனம், சண்டி பாராயணம், ஜபம், ஹோமம், பூர்ணாஹூதி, வசோர்தரா ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டன.


கலச அபிஷேகத்திற்கு பிறகு, விநாயகர் மற்றும் ஸ்ரீ தேவி காமாட்சிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. தீபாராதனைக்கு காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


மாலை ஏகாதசி அச்சித்ர அஸ்வமேத பாராயணம் நடைபெற்றது.


- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us