/பிற மாநில தமிழர்/புதுடில்லி/துவாரகா ஸ்ரீராம் மந்திரில் மண்டலாபிஷேக நிறைவு பூஜைதுவாரகா ஸ்ரீராம் மந்திரில் மண்டலாபிஷேக நிறைவு பூஜை
துவாரகா ஸ்ரீராம் மந்திரில் மண்டலாபிஷேக நிறைவு பூஜை
துவாரகா ஸ்ரீராம் மந்திரில் மண்டலாபிஷேக நிறைவு பூஜை
துவாரகா ஸ்ரீராம் மந்திரில் மண்டலாபிஷேக நிறைவு பூஜை
மே 08, 2024

துவாரகா ஸ்ரீராம் மந்திரில் மண்டலாபிஷேக பூஜைநிறைவாக இன்று காலை ஸ்ரீ இராமர் பட்டாபிஷேக ஹோமம் நடைபெற்றது. மண்டலாபிஷேகம் - இறைவனை 48 நாட்கள் விசேஷ அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்தல்.
இதையொட்டி, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், புருஷஸுக்த ஹோமம், ஸ்ரீ ஸூக்த ஹோமம், இராமர் பட்டாபிஷேகம் ஆகியவை சரவண சாஸ்திரிகளால் சிறப்பாக நடத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஸ்ரீ இராமருக்கு சிறப்பு பூஜை, ஆராதனை செய்விக்கப்பட்டது. பக்தர்கள் இதில் திரளாக கலந்து கொண்டு ஶ்ரீ ராமனின் தரிசனம் பெற்றனர். நிறைவாக அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்