ஜன 01, 2025

நொய்டா, செக்டார் 62 இல் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில் வளாகத்தில், அனுமன் ஜெயந்தியை வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் நிர்வாகம் (வி பி எஸ்) ஏற்பாடு செய்திருந்தது. காலையில் ஸ்ரீ சாந்த ஆஞ்சநேயருக்கு மகா அபிஷேகம் நடந்தது. மாலையில், ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் பக்தர்கள் 'ஹனுமான் சாலிசா' பன்னிரண்டு முறை 'பன்னிரண்டு ராசிகளின் பேரில்' வாசித்தனர்.
மேலும், ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 2508 வடை மாலையால் அணிவிக்கப்பட்டது . மகா தீபாராதனையுடன் நிறைவடைந்து, அங்கு கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது . அனைத்து பூஜைகளையும் கோவில் வாத்தியார்கள் மணிகண்டன் சர்மா, மோஹித் மிஸ்ரா செய்தனர். இதே போன்ற நிகழ்ச்சியை செக்டர் 22 இல் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயிலிலும் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தனர் . இந்நிகழ்ச்சியில், புத்தாண்டு காலண்டர்களை, வேதிக் பிரச்சார் சன்ஸ்தானின் மூத்த உறுப்பினர் Wg Cdr (ஓய்வு) எஸ் சந்திரசேகர் வெளியிட்டார். இந்த நாட்காட்டிகளை வெளியிட்ட கோயம்புத்தூர் பயனிர் பெர்டிலைசர்ஸ் நிறுவனத்துக்கும் கோயில் நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர்.

- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்