Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/புதுடில்லி/தலைநகரில் இசை நாட்டிய பெரும் விழா

தலைநகரில் இசை நாட்டிய பெரும் விழா

தலைநகரில் இசை நாட்டிய பெரும் விழா

தலைநகரில் இசை நாட்டிய பெரும் விழா

டிச 31, 2024


Latest Tamil News
கலைமாமணி ராமமூர்த்தி பாகவதர் மற்றும் பத்மபூஷண் சரோஜா வைத்தியநாதன் நினைவாக இசை மற்றும் நாட்டிய விழா, தில்லி தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து மிருதங்க கலைஞர் தஞ்சாவூர் கேசவன் ஏற்பாடு செய்திருந்தார். இப்பெரும் விழா வள்ளுவர் அரங்கில் நடைபெற்றது. காலை 10 மணிக்கு மங்கல நாதஸ்வர இசையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது.

தொடர்ந்து ஆனந்த் ராவ் பாட்டீல் ( கூடுதல் செயலர் கல்வி அமைச்சகம்) சக்தி பெருமாள் (தமிழ்சங்க தலைவர் ), ராகவன் நாயுடு (துணை தலைவர் ) அருணாசலம் தில்லி தமிழ்ச் சங்கம் தஞ்சாவூர் கேசவன் குத்து விளக்கேற்றிய பின்னர் இளம் நடன கலைஞர்கள் ஒவ்வொரு பள்ளியில் இருந்து தனியாகவும் குழுக்களாக வந்து நடனம் ஆடினார்கள். தில்லி தவிர அஸ்ஸாம், கல்கத்தா குஜராத் போன்ற இடங்களில் இருந்தும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.


இவ்விழாவில் பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் , கதக் , ஒடிசி ஆகிய பிரிவில் நடனமாடினர். பல்வேறு நடன குருமார்கள் வந்திருந்து வளரும் இளம் கலைஞர்களுக்கு ஆசிவழங்கியது பாராட்டத்தக்கது. தலைநகரில் சிறந்த மிருதங்க வித்வானாக வலம் வரும் தஞ்சாவூர் ஆர். கேசவன் தனது தந்தையின் நினைவாக இவ்விழாவை கடந்த பல வருடங்களாக நடத்தி வருகிறார். கிட்டத்தட்ட பத்து மணிநேரம் தொடர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது சிறப்பு அம்சம்.


இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பத்ம விபூஷண் டாக்டர் சோனால் மான்சிங் கலந்து கொண்டு நடன குருமார்களுக்கு குருசம்மான், கலை பாதுகாவலர் விருது வழங்கி கெளரவித்தார்.


பத்மஸ்ரீ ரஞ்சனா கெளர் ( ஒடிசி)


குரு சிந்து மிஸ்ரா( தியேட்டர்)


குரு ஜெயப்பிரதா மேனன் ( மோகினி ஆட்டம்)


பத்மஸ்ரீ ஷோபனா நாராயணன் (கதக்)


பத்ம ஸ்ரீ ஜெயராமாராவ் (குச்சிப்புடி)


குரு வனஸ்ஸ்ரீராவ் (குச்சிப்புடி)


பண்டிட் ராஜேந்திர கங்காணி ( கதக்)


குரு ஸ்ரீமதி மட்கோல்கர் ( பரதம்)


குரு வசந்தி ஸ்ரீதர் ( பரதம்)


குரு கனகா சுதாகர் ( பரதம்)


வித்வான் ஜி.எஸ் ராஜன் (புல்லாங்குழல்)


கலை பாதுகாவலர் சப்பான்:- ஆர் முகுந்தன் ( செயலர், தில்லி தமிழ் சங்கம்)


கண்ணன் ( துணை செயலர், தில்லி முத்தமிழ் பேரவை).


பங்கேற்ற நடனகலைஞர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியை மீனா வெங்கி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக அகிலா அய்யர், பரத கலைஞர் ஆஷ்னா பிரியம்வதா மற்றும் பலரும் தங்கள் பங்களிப்பினால் சிறக்கச் செய்தனர். பாரம்பரிய கலையில் இளையதலைமுறையின் ஆர்வம் பாராட்டுதல்களுக்குரியது.


- நமது செய்தியாளர் மீனா வெங்கி






      Our Apps Available On




      Dinamalar

      Follow us