அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் 5 லட்சம் பேர்: டிரம்ப்புக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் 5 லட்சம் பேர்: டிரம்ப்புக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் 5 லட்சம் பேர்: டிரம்ப்புக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
ADDED : மே 30, 2025 09:23 PM

வாஷிங்டன்: கியூபா, நிகரகுவா, ஹைதி மற்றும் வெனிசுலா நாடுகளை சேர்ந்த 5,32,000 பேருக்கு வழங்கப்பட்ட சட்டப்பூர்வ அகதிகள் அந்தஸ்தை ரத்து செய்ய டிரம்ப் அரசுக்கு அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உள்ளது. இதனால், அவர்கள் நாடு கடத்தப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்த போது, மனிதாபிமான பரோல் திட்டத்தின் கீழ் கியூபா, ஹைதி, நிகரகுவா மற்றும் வெனிசுலாவை சேர்ந்த 5,32,000க்கும் மேற்பட்டோர் மனிதாபிமான பரோல் திட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தனர். ஆனால், அவர்கள் வெளியேற வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் விரும்பியது. அவர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக அகதிகள் அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும். அல்லது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டனர்.
ஆனால், டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், அவர்களுக்கு சற்று நம்மதி அடைந்தனர். இதனை எதிர்த்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம் டிரம்ப் நிர்வாகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இதன்படி, வெனிசுலா, கியூபா, ஹைதி மற்றும் நிகரகுவாவை சேர்ந்த 5,32,000 அகதிகளுக்கு வழங்கப்பட்ட சட்டப்பூர்வமான தற்காலிக அந்தஸ்தை ரத்து செய்வதற்கு அனுமதி வழங்கியது. இதனால், அவர்கள் நாடு கடத்தப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.