ஈரானின் 3 அணு உலைகள் மீது வெற்றிகரமாக அமெரிக்கா குண்டுவீச்சு: அமெரிக்க அதிபர் டிரம்ப்
ஈரானின் 3 அணு உலைகள் மீது வெற்றிகரமாக அமெரிக்கா குண்டுவீச்சு: அமெரிக்க அதிபர் டிரம்ப்
ஈரானின் 3 அணு உலைகள் மீது வெற்றிகரமாக அமெரிக்கா குண்டுவீச்சு: அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: இஸ்ரேல், ஈரான் இடையே இரு வாரங்களாக போர் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் 3 அணு உலைகள் மீது வெற்றிகரமாக தாக்கியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட பதிவு: ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களான போர்டோவ், நடான்ஸ், எஸ்பஹான் மீது வெற்றிகரமாக தாக்குதலை அமெரிக்க போர்விமானங்கள் இன்று(ஜூன் 22) நடத்தி உள்ளது.
தாக்குதல் நடத்திய விமானங்கள் பாதுகாப்பாக ஈரானின் வான்வெளியில் இருந்து வெளியே வந்துவிட்டன. நமது சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துகள். இதைப் போன்று செய்யக் கூடிய ராணுவம் உலகில் எங்கும் இல்லை. இப்போது அமைதிக்கான நேரம்.இவ்வாறு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.