தைவான் அதிபர் தேர்தல் ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி
தைவான் அதிபர் தேர்தல் ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி
தைவான் அதிபர் தேர்தல் ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி
ADDED : ஜன 13, 2024 11:39 PM

தைபே :தைவானில் நடந்த அதிபர் தேர்தலில், ஆளுங்கட்சி வேட்பாளர் லாய் சிங் டே வெற்றி பெற்றார்.
கிழக்கு ஆசிய நாடான தைவானை, தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக, நம் அண்டை நாடான சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த பரபரப்பான அரசியல் நிகழ்வுகளுக்கு இடையே, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலை சந்திக்கும் தைவானில், நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. இதில், ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில், அதன் துணைத் தலைவர் லாய் சிங் டே, 64, களமிறங்கினார்.
அவரை எதிர்த்து, சீன ஆதரவு பெற்ற தேசியவாத கட்சியைச் சேர்ந்த ஹவ் யொ-ஹி மற்றும் தைவான் மக்கள் கட்சியைச் கோ வென் ஜி களமிறங்கினர். தேர்தலில் பதிவான ஓட்டுகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, ஆளுங்கட்சியைச் சேர்ந்த லாய் சிங் டே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இவர், அமெரிக்காவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க கூடியவராக அறியப்படுகிறார்.
'லாய் சிங் டே வெற்றி பெற்றால் பிராந்தியத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்' என, சீனா விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.