வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம்: வன்முறையாக மாறியதால் நாடு முழுதும் இணைய சேவை முடக்கம்
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம்: வன்முறையாக மாறியதால் நாடு முழுதும் இணைய சேவை முடக்கம்
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம்: வன்முறையாக மாறியதால் நாடு முழுதும் இணைய சேவை முடக்கம்
ADDED : ஜூலை 18, 2024 04:06 PM

டாக்கா: வங்கதேசத்தில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு அரசுப் பணியில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் வன்முறையாக மாறியதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக மொபைல் இணைய சேவையை முடக்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது.
வங்கதேசம் - பாகிஸ்தான் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு அரசுப் பணியில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை வங்கதேசத்தில் இருந்தது. கடந்த 2018ல் மாணவர்கள் போராட்டத்தால் இடஒதுக்கீடு முறை நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அந்த 30 சதவீத இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தை துவங்கினர்.
![]() |
ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பினர், போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், போலீசார் மற்றும் ராணுவப் படையினரும் தாக்கியதால் வன்முறை ஏற்பட்டது. நாடு முழுவதும் மாணவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியதால், பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேசம் முழுவதும் இணைய சேவையை முடக்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. வன்முறையில் இதுவரை 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.