சீனாவில் 14 மாடி கட்டடத்தில் தீ: 16 பேர் பலி; 75 பேர் பத்திரமாக மீட்பு
சீனாவில் 14 மாடி கட்டடத்தில் தீ: 16 பேர் பலி; 75 பேர் பத்திரமாக மீட்பு
சீனாவில் 14 மாடி கட்டடத்தில் தீ: 16 பேர் பலி; 75 பேர் பத்திரமாக மீட்பு
UPDATED : ஜூலை 18, 2024 10:16 AM
ADDED : ஜூலை 18, 2024 08:04 AM

பெய்ஜீங்: சீனாவில் 14 அடுக்கு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியாகினர். 75 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சீனாவிவ் ஷிக்ஹாங் பகுதியில் 14 மாடி கொண்ட வர்த்தக மையம் உள்ளது. இந்த மாலில் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில் நேற்று இரவில் இங்கு ஒரு மாடியில் இருந்து தீ பரவியது. கரும்புகையுடன் நெருப்பு பிழம்பாக எரிந்தது. மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். தீயணைப்பு படையினர் 300 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் சம்பவ இடத்தில் 16 பேர் பலியாகினர். 75 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
கடந்த ஜனவரி, பிப்ரவரியில் நடந்த தீ விபத்தில் 70 பேர் பலியாகினர்.