Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ ஸ்டார்ஷிப்பின் ஒன்பதாவது சோதனை ராக்கெட் தோல்வி

ஸ்டார்ஷிப்பின் ஒன்பதாவது சோதனை ராக்கெட் தோல்வி

ஸ்டார்ஷிப்பின் ஒன்பதாவது சோதனை ராக்கெட் தோல்வி

ஸ்டார்ஷிப்பின் ஒன்பதாவது சோதனை ராக்கெட் தோல்வி

ADDED : மே 29, 2025 12:49 AM


Google News
Latest Tamil News
டெக்ஸாஸ்: 'ஸ்பேஸ்எக்ஸ்' விண்வெளி நிறுவனத்தால் விண்ணில் செலுத்தப்பட்ட ஒன்பதாவது 'ஸ்டார்ஷிப்' சோதனை ராக்கெட்டும் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது.

அமெரிக்காவின் மிகப்பெரும் தொழிலதிபர் எலான் மஸ்கின் விண்வெளி நிறுவனம் 'ஸ்பேஸ்எக்ஸ்'. இந்நிறுவனம் 'ஸ்டார்ஷிப்' என்ற பெயரில் மறுபயன்பாட்டு விண்கல திட்டத்தை சோதித்து வருகிறது.

இந்த திட்டம் வெற்றி பெற்றால், விண்வெளி பயணச் செலவு குறையும். விண்வெளி ஆய்வை மிகவும் மலிவானதாக மாற்ற முடியும் என்கின்றனர்.

முக்கிய பகுதி


டெக்ஸாஸில் உள்ள 'ஸ்டார்பேஸ்' விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 'ஸ்டார்ஷிப்' சோதனை ராக்கெட்டுகளை 'ஸ்பேஸ்எக்ஸ்' ஏவி வருகிறது. 400 அடி நீளம் உடைய இந்த ராக்கெட்டில் இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன.

ஒன்று விண்வெளி வீரர்கள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் விண்கலப் பகுதி.

இரண்டாவது 'சூப்பர் ஹெவி பூஸ்டர்' எனப்படும் விண்கலத்தை ஏவுவதற்கான 33 'ரேப்டர் என்ஜின்கள்' உள்ள பகுதி.

ராக்கெட்டின் வெப்பக் கவசத்தின் செயல்பாடு மற்றும் பூஸ்டர் பகுதியை மீண்டும் தரையிறக்குதல் ஆகிய சோதனைகளுக்காக 'ஸ்டார்ஷிப்' ராக்கெட்டை தாழ் புவி வட்டப்பாதை வரை செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை எட்டு 'ஸ்டார்ஷிப்'புகள் ஏவப்பட்டன. அவை எதுவும் இலக்குகளை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில், நேற்று டெக்ஸாஸ் ஏவுதளத்தில் இருந்து ஒன்பதாவது 'ஸ்டார்ஷிப்' ராக்கெட் ஏவப்பட்டது. அது எரிபொருள் கசிவு காரணமாக நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது.

முன்னேற்றம்


இது குறித்து 'ஸ்பேஸ்எக்ஸ்' தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் வெளியிட்ட அறிக்கையில், 'தற்போது ஏவப்பட்ட 'ஸ்டார்ஷிப்' என்ஜின்கள் திட்டமிட்டப்படி நிறுத்தம் கண்டன. கடந்த ராக்கெட்டுகளுடன் ஒப்பிடுகையில், இது மிகப்பெரிய முன்னேற்றம். வெப்ப கவசமும் சேதமடையவில்லை.

'ஆய்வு செய்ய நிறைய நல்ல தரவுகள் உள்ளன. அடுத்தது மூன்று 'ஸ்டார்ஷிப்'புகள் மாதம் ஒன்று என்ற முறையில் விரைவாக ஏவப்படும்' என கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us