பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க போர்ச்சுகல் அரசும் முடிவு
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க போர்ச்சுகல் அரசும் முடிவு
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க போர்ச்சுகல் அரசும் முடிவு
ADDED : செப் 21, 2025 12:31 AM
லிஸ்பன்:பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளதாக போர்ச்சுகல் அரசு தெரிவித்து உள்ளது.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே நீண்ட காலமாக மோதல் உள்ளது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட கால கோரிக்கை உள்ளது.
இதை அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்டவை ஏற்கவில்லை.
இந்நிலையில், மேற்கு ஐரோப்பிய நாடான போர்ச்சுகல், பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் நாடுகளுக்கான பட்டியலில் போர்ச்சுகலும் தற்போது இணைந்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடன், இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ளது.
இந்தப் போரில், மனிதாபிமான நெருக்கடி மற்றும் பாலஸ்தீன நிலங்களை இஸ்ரேல் இணைக்க முயல்வதாக பல நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இதையடுத்து, பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதாக பல நாடுகள் கூறி வருகின்றன.
கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி, ஐ.நா., உறுப்பு நாடுகளில் 147 நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.
தற்போதைய புதிய அறிவிப்புகள் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும்.