எங்களை தொட்டால் சவுதி சண்டை வரும் பாக்., ராணுவ அமைச்சர் பேச்சு
எங்களை தொட்டால் சவுதி சண்டை வரும் பாக்., ராணுவ அமைச்சர் பேச்சு
எங்களை தொட்டால் சவுதி சண்டை வரும் பாக்., ராணுவ அமைச்சர் பேச்சு
ADDED : செப் 21, 2025 12:34 AM

இஸ்லாமாபாத்:''இந்தியா எங்கள் மீது போர் தொடுத்தால், இனி சவுதி அரேபியா உதவிக்கு வரும்,'' என பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் மேற்காசிய நாடான சவுதி அரேபியாவுக்கு சென்றார்.
தலைநகர் ரியாத்தில் அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்துப் பேசினார். அப்போது இருநாடுகள் இடையே பரஸ்பர பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதாவது வேறு எந்த நாடாவது போர் தொடுத்தால், பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா பரஸ்பர ஒத்துழைப்பை வழங்கும்.இந்த ஒப்பந்தத்தின்படி இனி இந்தியா தாக்கும்போது பாகிஸ்தானுக்கு, சவுதி அரேபியா உதவுமா என்று ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதில்:
ஆம், நிச்சயமாக; அதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒப்பந்தத்தின்படி பாக்., மீதான எந்தவொரு தாக்குதலையும் தன் மீதான தாக்குதலாக சவுதி அரேபியா எடுத்துக் கொள்ளும். அதேபோல் சவுதி அரேபியா மீதான எந்தவொரு தாக்குதலையும், பாக்., தன் மீதான தாக்குதலாக எடுத்துக் கொள்ளும்.
இருநாடுகள் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் கூட்டாக இணைந்தே பதிலடி கொடுப்போம். அதேபோல் சவுதி அரேபியாவுக்கு தேவையான அணு ஆயுதங்களையும் பாகிஸ்தான் வழங்கும்.
இந்த ஒப்பந்தத்தை எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் பயன்படுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால் நாங்கள் அச்சுறுத்தப்பட்டால் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவோம். இது அனைத்து ராணுவ வழிகளையும் உள்ளடக்கிய ஒரு விரிவான தற்காப்பு ஒப்பந்தம்.
இவ்வாறு கூறினார்.