Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/மிரட்டலில் ஈடுபட அனுமதிக்கக்கூடாது: போப் வலியுறுத்தல்

மிரட்டலில் ஈடுபட அனுமதிக்கக்கூடாது: போப் வலியுறுத்தல்

மிரட்டலில் ஈடுபட அனுமதிக்கக்கூடாது: போப் வலியுறுத்தல்

மிரட்டலில் ஈடுபட அனுமதிக்கக்கூடாது: போப் வலியுறுத்தல்

Latest Tamil News
ரோம்: '' இன்னொருவரின் இருப்பை மற்றொருவர் மிரட்டுவதை அனுமதிக்கக்கூடாது,'' என போப் லியோ வலியுறுத்தி உள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் இடையில் நடக்கும் மோதல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தும் தாக்குதலில், ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டு உள்ளனர். ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் போப் லியோ கூறியதாவது: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் பெரிய கவலை அளிக்கிறது. இரு நாடுகளும் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.

அணுசக்தி அச்சுறுத்தல் இல்லாத பாதுகாப்பான உலகத்தை கட்டமைப்போம் என்ற உறுதிப்பாட்டை, நிறைவேற்ற அமைதியான வழியில் நிறைவேற்ற வேண்டும்.நீதி, சகோதரத்துவம் மற்றும் பொது நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நீடித்த அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை துவங்கப்பட வேண்டும்.



இன்னொருவரின் இருப்பை மற்றொருவர் மிரட்ட அனுமதிக்கக்கூடாது. அமைதிக்கான காரணத்தை ஆதரிப்பது, நல்லிணக்க பாதைகளை துவங்குவது மற்றும் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் தீர்வுகளை ஊக்குவிப்பது அனைத்து நாடுகளின் கடமையாகும். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us