பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வாழ்த்து
பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வாழ்த்து
பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வாழ்த்து
UPDATED : ஜூன் 10, 2024 03:46 PM
ADDED : ஜூன் 10, 2024 02:34 PM

இஸ்லாமாபாத்: இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டில்லியில் நேற்று (ஜூன் 09) ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றார். பதவியேற்பு விழாவில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவுகள் அதிபர் முகமது முய்சு, செஷல்ஸ் துணை அதிபர் அஹமது ஆபிப், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜகன்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாமல் பிரசண்டா, பூட்டான் பிரதமர் ஷெரிங் தோப்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு இன்று (ஜூன் 10) பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார். மோடி 3வது முறையாக பிரதமர் ஆக தேர்வு செய்யப்பட்டதும் உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பாகிஸ்தான் வாழ்த்து சொல்லாமல் மவுனம் காத்தது. இது குறித்து சமூகவலைதளத்தில் விவாதம் கிளம்பியது.
இதற்கு, புதிய அரசு பதவியேற்காததால் இந்திய பிரதமருக்கு வாழ்த்து தெரிவிப்பது குறித்து பேசுவது முதிர்ச்சியற்றது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாக்ரா கூறியிருந்தார். ஆனால் புதிய அரசு பொறுப்பேற்றதும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இன்று தனது வாழ்த்துக்களை பிரதமர் மோடிக்கு தெரிவித்துள்ளார்.