11 ராணுவ வீரர்கள் மட்டுமே பலியாம்; புளுகுமூட்டையை அவிழ்த்து விடும் பாக்.,
11 ராணுவ வீரர்கள் மட்டுமே பலியாம்; புளுகுமூட்டையை அவிழ்த்து விடும் பாக்.,
11 ராணுவ வீரர்கள் மட்டுமே பலியாம்; புளுகுமூட்டையை அவிழ்த்து விடும் பாக்.,
ADDED : மே 14, 2025 12:22 AM

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலில், 11 ராணுவ வீரர்கள், 40 பொதுமக்கள் இறந்துள்ளதாக, அறிக்கை ஒன்றில் பாகிஸ்தான் நேற்று கூறியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், கடந்த 7ம் தேதி முதல், 10ம் தேதி வரை, இந்தியா தாக்குதல் நடத்தியது.
இதில், 11 ராணுவத்தினர், 40 அப்பாவி பொதுமக்கள் பலியாகிஉள்ளனர். இறந்தவர்களில், பாகிஸ் தான் ராணுவத்தின் ஸ்குவாடரன் லீடர் ஒருவரும் அடக்கம். இந்திய ராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலில், பாகிஸ்தான் விமானப்படை விமானம் ஒன்றுக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
ஆனால், நம் மத்திய அரசு 40க்கும் மேற்பட்ட பாக்., ராணுவ வீரர்களும், 100 பயங்கரவாதிகளும் கொல்லப் பட்டதை ஆதாரங்களுடன் நேற்று முன்தினம் வெளியிட்டது.