பயங்கரவாதி மசூத்அசார் ஆப்கானிஸ்தானில் பதுங்கல்?
பயங்கரவாதி மசூத்அசார் ஆப்கானிஸ்தானில் பதுங்கல்?
பயங்கரவாதி மசூத்அசார் ஆப்கானிஸ்தானில் பதுங்கல்?
UPDATED : ஜூன் 30, 2025 01:34 PM
ADDED : ஜூன் 30, 2025 01:25 PM

இந்தியாவில் பல பயங்கரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத்அசார் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருப்பதாக ஒரு ரகசிய தகவல் தெரிவிக்கிறது.
இந்தியாவின் அதிரடி நடவடிக்கை
காஷ்மீரில் ஹிந்துக்கள் குறி வைத்து கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து சிந்தூர் ஆப்பரேஷன் மூலம் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன, பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் இது போன்ற மிகப்பெரிய எதிர் நடவடிக்கை பயங்கரவாதிகளை திகைக்க வைத்துள்ளது.
'தியாகம்' என்ற பெயரில் உயிர் துறக்க பலரை அனுப்பி வைக்கும் மசூத் அசார் இன்று மரண பயத்தில் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்.
ஒரு காலத்தில் பாகிஸ்தானில் அமர்ந்து இந்தியாவுக்கு எதிராக சதி செய்த ஜெய்ஷ்-இ-முகமது தளபதி, இன்று தனது சகோதரர் மௌலானா தல்ஹா ஆசிப்புடன் ஆப்கானிஸ்தானில் ஒளிந்து இருப்பதாக பாகிஸ்தான் தரப்பு செய்தி தெரிவிக்கிறது.
உளவுத்துறை வட்டாரங்களின்படி, இந்திய அமைப்புகள் மீண்டும் பயங்கரவாத மறைவிடங்கள் மீது ஒரு பெரிய தாக்குதலை நடத்தக்கூடும் என்று மசூத் அசார் அஞ்சுவதாக கூறப்படுகிறது. சிந்தூரில் தனது உறவினர்கள் கொல்லப்பட்டதை போலவே தாமும் கொல்லப்படலாம் என்ற பயம் எழுந்துள்ளது. இதன்காரணமாக பாகிஸ்தானில் இருந்து அவர் வெளியேறியுள்ளார். ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தின் குர்பூஸ் மாவட்டத்தில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் பயிற்சி முகாமில் மசூத் அசார் தற்போது பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அவர் தனது தம்பி மௌலானா தல்ஹாவையும் ஆப்கானிஸ்தானுக்கு அழைத்துச் சென்று பயங்கரவாத முகாம்களைக் கவனிக்கும் பொறுப்பை அவரிடம் கொடுத்துள்ளார்.இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் மசூத் அசார் போன்ற பயங்கரமான பயங்கரவாதிகள் தூக்கத்தை தொலைத்து நிற்கின்றனர்.
ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசாங்கம் எந்தவொரு பயங்கரவாத அமைப்பிற்கும் அடைக்கலம் கொடுக்கவில்லை என்று வெளிப்படையாகக் கூறினாலும், உண்மை என்னவென்றால், பல பயங்கரவாதிகள் ஆப்கனில் பதுங்கி உள்ளதாகவே கூறப்படுகிறது.