பள்ளி மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்: காசாவில் 39 பேர் பரிதாப பலி
பள்ளி மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்: காசாவில் 39 பேர் பரிதாப பலி
பள்ளி மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்: காசாவில் 39 பேர் பரிதாப பலி
ADDED : ஜூன் 06, 2024 02:06 PM

ஜெருசலேம்: காசா பகுதியில் உள்ள பள்ளிக் கூடத்தில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில், 5 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, பல மாதங்களாக மோதல் நடக்கிறது. காசாவை தொடர்ந்து, ரபாவிலும் இரு தரப்புக்கு இடையே சண்டை நடக்கிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பள்ளி மீது தாக்குதல்
இந்நிலையில், காசாவில் உள்ள பள்ளியில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில், 5 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் தரப்பும் கூட உறுதி செய்துள்ளது. பள்ளி வளாகத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்கி இருந்த காரணத்தினால் தாக்குதல் நடத்தினோம் என இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
அப்பாவி மக்கள் மீது தாக்குதல்களை நடத்திவிட்டு அதைச் சமாளிக்கப் பொய்க் கதைகளை இஸ்ரேல் சொல்லி வருவதாக ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் அல்-தவாப்தா தெரிவித்துள்ளார்.