Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/இந்திய மாணவர்களுக்கு ஈரான் ஸ்பெஷல் அனுமதி: 1000 பேர் வெளியேற வான்வெளி திறப்பு

இந்திய மாணவர்களுக்கு ஈரான் ஸ்பெஷல் அனுமதி: 1000 பேர் வெளியேற வான்வெளி திறப்பு

இந்திய மாணவர்களுக்கு ஈரான் ஸ்பெஷல் அனுமதி: 1000 பேர் வெளியேற வான்வெளி திறப்பு

இந்திய மாணவர்களுக்கு ஈரான் ஸ்பெஷல் அனுமதி: 1000 பேர் வெளியேற வான்வெளி திறப்பு

ADDED : ஜூன் 20, 2025 06:44 PM


Google News
Latest Tamil News
டெஹ்ரான்: இந்திய மாணவர்கள் 1000 பேர் வெளியேறுவதற்காக சிறப்பு நிகழ்வாக வான் வெளியை ஈரான் அரசு திறந்துள்ளது.

ஈரான், இஸ்ரேல் நாடுகளின் போர் மேலும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த மோதலால் ஈரானில் உள்ள பல நகரங்களில் உள்ள இந்திய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஈரானில் உள்ள தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அங்குள்ள இந்திய மாணவர்களை வெளியேற்ற மத்திய அரசு மற்றும் அங்குள்ள தூதரகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் நடவடிக்கை துவங்கி உள்ளது.

இந்த ஆபரேஷன் மூலம் முதல்கட்டமாக 110 இந்திய மாணவர்கள் ஈரானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஈரானில் இருந்து சாலை மார்க்கமாக அர்மேனியா தலைநகர் எரவான் எல்லை அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டில்லி கொண்டு வரப்பட்டனர்.

இந் நிலையில், ஈரானில் இருந்து அடுத்த கட்டமாக 1000 இந்திய மாணவர்கள் வெளியேற வான்வெளியை ஈரான் அரசு திறந்து விட்டுள்ளது. ஈரான் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான மகான் ஏர்வேஸ் 3 விமானங்கள் மூலம் இந்திய மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

இவர்கள் அனைவரும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தாத நகரமான மஸ்சாத் வழியாக பாதுகாப்பாக அழைத்து வர ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. முதல் விமானத்தின் மூலம் மாணவர்களில் ஒரு பகுதியினர் தலைநகர் டில்லி அழைத்து வரப்படுவார்கள். எஞ்சியவர்களும் பகுதி, பகுதியாக அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

இஸ்ரேல் மீதான போர் எதிரொலியாக ஈரான் தமது வான்வெளியை மூடி இருந்தது. தற்போது இந்தியாவின் கோரிக்கையை ஏற்று வான்வெளியை திறந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us