ஷாப்பிங் மாலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; சிங்கப்பூரில் இந்திய நபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
ஷாப்பிங் மாலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; சிங்கப்பூரில் இந்திய நபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
ஷாப்பிங் மாலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; சிங்கப்பூரில் இந்திய நபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
ADDED : செப் 22, 2025 04:09 PM

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஷாப்பிங் மாலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இந்திய நபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்தவரும், சிங்கப்பூரில் நிரந்த குடியிருப்புவாசியுமான அன்கித் ஷர்மா, சாங்கி நகரில் உள்ள பாயிண்ட் மாலில் பணி நிமித்தமாக 31 வயதுடைய பெண் தொழில்நுட்ப நிபுணரை சந்தித்தார். அப்போது, ஆபாசமாக பேசத் தொடங்கிய அவர், அந்தப் பெண்ணை அருகே இருந்த அறைக்கு இழுத்துச் சென்று செய்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அதன்பேரில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட அன்கித் ஷர்மா தன் மீதான புகாரை மறுத்தார். ஆனால், வழக்கு விசாரணையின் முடிவில் அன்கித் ஷர்மாவின் மீதான குற்றம் நிரூபணமானது.
இதனால், அன்கித் ஷர்மாவுக்கு 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், சாட்டையடியும் விதிக்கப்பட வாய்ப்பிருந்தது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 6 சாட்டையடிகளையும் வழங்குமாறு கோரிக்கை விடுத்ததை அடுத்து, நீதிமன்றம் அதனை ஏற்றுக் கொண்டது.