இந்தியர் கொடூரக்கொலை; குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை; டிரம்ப் உறுதி
இந்தியர் கொடூரக்கொலை; குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை; டிரம்ப் உறுதி
இந்தியர் கொடூரக்கொலை; குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை; டிரம்ப் உறுதி
ADDED : செப் 15, 2025 07:31 AM

வாஷிங்டன்: டல்லாஸில் இந்தியர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கியூபாவைச் சேர்ந்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் டல்லாஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 50 வயதான சந்திரமௌலி நாகமல்லையா அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் கோடரியால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். சந்திர மௌலி நகமல்லையா கர்நாடகாவைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்காவில் டல்லாஸில் உள்ள டவுன்டவுன் சூட்ஸ் என்ற ஹோட்டலில் மேலாளர் ஆக பணிபுரிந்து வந்தார். இவரை கொலை செய்தததுக்கு பல்வேறு அமெரிக்க பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், இந்தியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; டல்லாஸில் நடந்த சந்திர நாகமல்லையா கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பற்றி அறிந்தேன். கியூபாவைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறியால், மனைவி மற்றும் மகன் முன்னிலையில் இந்த மதிப்புமிக்க நபர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
இதுபோன்ற நபர்கள் நம் நாட்டில் ஒருபோதும் இருக்கக் கூடாது. குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை, வாகன கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்ட கியூபாவைச் சேர்ந்த இந்த நபர், திறனற்ற ஜோ பைடனின் ஆட்சியில் நம் நாட்டில் மீண்டும் விடுதலை செய்யப்பட்டார்.
இதுபோன்று சட்டவிரோதமாக குடியேறும் குற்றவாளிகள் மீது மென்மையாக நடந்து கொள்ளும் போக்கு எல்லாம் என்னுடைய ஆட்சியில் முடிந்து விட்டது. தேசிய பாதுகாப்பு செயலாளர் கிரிஸ்டி நோம், அட்டர்னி ஜெனரல் பாம் போன்டி உள்பட என்னுடைய நிர்வாகத்தில் உள்ள பலர் அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பாக மாற்றும் பணியில் அற்புதமான வேலை செய்து வருகிறார்கள்.
போலீஸ் காவலில் இருக்கும் இந்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.