21 டன் நிவாரண பொருட்கள் அனுப்பியது இந்தியா
21 டன் நிவாரண பொருட்கள் அனுப்பியது இந்தியா
21 டன் நிவாரண பொருட்கள் அனுப்பியது இந்தியா
ADDED : செப் 04, 2025 06:26 AM

காபூல்: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு, 21 டன் நிவாரணப் பொருட்களை விமானம் வாயிலாக இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், சமீபத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் குனார் மாகாணத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டது.
நிலநடுக்கத்தில், 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்; 3,000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
நிலநடுக்கம் பாதித்த ஆப்கனுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவி செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.
இதையடுத்து, இந்தியா சார்பில் ஆப்கனுக்கு 21 டன் நிவாரண பொருட்கள் விமான மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
போர்வைகள், கூடாரங்கள், நீர் தொட்டிகள், ஜெனரேட்டர்கள், சமையல் பாத்திரங்கள், மருந்துகள், சக்கர நாற்காலிகள், சோப்புகள் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இது தவிர அரிசி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு உள்ளன.