ஹோலி பண்டிகைக்கு அமெரிக்காவில் விடுமுறை
ஹோலி பண்டிகைக்கு அமெரிக்காவில் விடுமுறை
ஹோலி பண்டிகைக்கு அமெரிக்காவில் விடுமுறை
ADDED : மார் 21, 2025 07:02 AM
ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹோலி பண்டிகைக்கு விடுமுறை விடுவதற்கு அனுமதி அளித்து செனட் சபையில் தீர்மானம் நிறைவேறியது.
அமெரிக்காவின் நியுயார்க், ஜார்ஜியா ஆகிய மாகாணங்களில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை அங்கீகரித்து, அம்மாகாண செனட் சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த மாநிலங்களில் ஹோலி பண்டிகைக்கு விடுமுறை விடப்படுகிறது.
இந்நிலையில், மூன்றாவது மாகாணமாக டெக்சாஸ் மாகாண செனட் சபையிலும் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேறியது. தீர்மானத்தில், 'டெக்சாஸ் மாகாணத்தின் கலாசார வேறுபாட்டை ஒருங்கிணைக்கும் விழாவாக ஹோலி உள்ளது. உலகம் முழுதும் அன்பையும், புத்துணர்ச்சியையும் விதைக்கும், இந்த பண்டிகைக்கு விடப்படும் விடுமுறையானது கொண்டாடக் கூடியது' என குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்மானம் நிறைவேறியதால், டெக்சாஸ் மாகாணத்திலும் ஹோலி பண்டிகைக்கு விடுமுறை விடப்படும்.
டெக்சாஸ் மாகாணத்தின் இந்த முடிவுக்கு ஹூஸ்டனில் உள்ள இந்திய துணை துாதர் மஞ்சுநாத் பாராட்டு தெரிவித்தார்.