Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ஹத்ராஸ் சம்பவம்: ரஷ்ய அதிபர், ஜப்பான் பிரதமர் இரங்கல்

ஹத்ராஸ் சம்பவம்: ரஷ்ய அதிபர், ஜப்பான் பிரதமர் இரங்கல்

ஹத்ராஸ் சம்பவம்: ரஷ்ய அதிபர், ஜப்பான் பிரதமர் இரங்கல்

ஹத்ராஸ் சம்பவம்: ரஷ்ய அதிபர், ஜப்பான் பிரதமர் இரங்கல்

ADDED : ஜூலை 03, 2024 08:07 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஹத்ராஸ், : உ.பி மாநிலம் ஹத்ராசில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் பலியான சம்பவத்திற்கு ரஷ்ய அதிபர், ஜப்பான் பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில், ஹத்ராஸ் மாவட்டத்தின் சிகந்த்ரா ராவ் பகுதியில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கூட்டம் முடிந்து வெளியேறிய போது நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 121 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின், வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஹத்ராசில் ‛நடந்த சம்பவம் தனக்கு வேதனை அளிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இவரது செய்தி இந்திய தூதரகம் வாயிலாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் ஜப்பான் பிரதமர் புமியே கிஷாடா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஹத்ராஸ் சம்பவம் அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us