Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ காங்கோவில் வெள்ளம் 60 பேர் உயிரிழப்பு

காங்கோவில் வெள்ளம் 60 பேர் உயிரிழப்பு

காங்கோவில் வெள்ளம் 60 பேர் உயிரிழப்பு

காங்கோவில் வெள்ளம் 60 பேர் உயிரிழப்பு

ADDED : மே 14, 2025 09:00 PM


Google News
பிரசாவில்லி:காங்கோ நாட்டில், வெள்ளத்தில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர். காலரா நோய் பரவிக் கொண்டிருக்கும் சூழலில் அந்நாட்டில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கு மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் சில வாரங்களாக பெய்யும் பலத்த மழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள தெற்கு கிவு மாகாணத்தில் பாதிப்பு அதிகரித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கி, 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 150க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஏராளமானோரை காணவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.

தொடர்ந்து, பலத்த மழை பெய்வதால் பாதிப்பு அதிகரித்துள்ளது. சர்வதேச அமைப்புகளிடம் அந்நாடு உதவி கோரியுள்ளது.

இதற்கிடையே, காங்கோவின் பல பகுதிகளில், கடந்த சில மாதங்களாக கட்டுக்கடங்காத காலரா நோய் பரவியுள்ளது. அதற்கு பலியாவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

வெள்ளம், காலரா நோய்க்கு மத்தியில், உள்நாட்டு சண்டையால் இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வடக்கு கிவு மாகாணத்தில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பாதுகாப்பான இடங்களுக்கு பெயர்ந்துள்ளனர்.

மொத்தத்தில் காலரா நோய், கடும் வெள்ளம் மற்றும் உள்நாட்டு சண்டை போன்ற பல காரணங்களால், கடந்த பிப்ரவரியில் இருந்து இப்போது வரை, 1.55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us