கமலா ஹாரிசுடன் ராகுல் தொலைபேசியில் பேசினாரா?
கமலா ஹாரிசுடன் ராகுல் தொலைபேசியில் பேசினாரா?
கமலா ஹாரிசுடன் ராகுல் தொலைபேசியில் பேசினாரா?
UPDATED : ஜூலை 13, 2024 05:29 PM
ADDED : ஜூலை 13, 2024 04:41 PM

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுடன், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தொலைபேசியில் பேசியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால், இதனை துணை அதிபர் அலுவலகம் மறுத்துள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில், ஜனநாயக கட்சி சார்பில் பைடன் களமிறங்கி உள்ளார். துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் போட்டியில் உள்ளார். இதற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பைடன் போட்டியில் இருந்து விலகும் பட்சத்தில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளர் ஆகும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், கமலா ஹாரிசுடன், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தொலைபேசி மூலம் பேசியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவியது. இதற்கு காங்., தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், இதனை மறுத்து துணை அதிபர் அலுவலக அதிகாரிகள், ராகுலுடன் கமலா ஹாரிஸ் பேசவில்லை எனவும், அது குறித்த செய்தி உண்மையில்லை என தெரிவித்து உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.