நைஜீரியாவில் பள்ளி கட்டடம் இடிந்து தரைமட்டம்: 22 மாணவர்கள் பரிதாப பலி
நைஜீரியாவில் பள்ளி கட்டடம் இடிந்து தரைமட்டம்: 22 மாணவர்கள் பரிதாப பலி
நைஜீரியாவில் பள்ளி கட்டடம் இடிந்து தரைமட்டம்: 22 மாணவர்கள் பரிதாப பலி
ADDED : ஜூலை 13, 2024 04:08 PM

அபுஜா: நைஜீரியாவில் இரண்டு மாடி பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 22 மாணவர்கள் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்கப்பட்டனர்.
வட-மத்திய ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் ஜோஸ் நகரில் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கட்டம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. 154 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இடிபாடுகளில் சிக்கிய 100க்கும் மேற்பட்டவர்களை உள்ளூர் மக்களும், மீட்புப்படையினரும் இணைந்து மீட்டனர். காயமடைந்த மாணவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து மீட்பு படை அதிகாரி ஒருவர் கூறியதாவது: விபத்தில் சிக்கிய மாணவர்கள் அனைவரும் 15 வயதிற்கு உட்பட்டவர்கள். கட்டடம் இடிந்து விழுந்தபோது 154 மாணவர்கள் வகுப்பறையில் இருந்துள்ளனர். 132 மாணவர்கள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கி 22 மாணவர்கள் உயிரிழந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.