அமெரிக்காவில் சட்டசபை உறுப்பினர் சுட்டுக் கொலை; போலீஸ் வேடத்தில் மர்மநபர் வெறிச்செயல்!
அமெரிக்காவில் சட்டசபை உறுப்பினர் சுட்டுக் கொலை; போலீஸ் வேடத்தில் மர்மநபர் வெறிச்செயல்!
அமெரிக்காவில் சட்டசபை உறுப்பினர் சுட்டுக் கொலை; போலீஸ் வேடத்தில் மர்மநபர் வெறிச்செயல்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர் மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின், மினசோட்டா சட்டசபை உறுப்பினர்கள் இருவர் தங்கள் வீடுகளில் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். போலீஸ் வேடமடைந்து வந்த, மர்மநபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர் மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மற்றொரு சட்டசபை உறுப்பினர் ஜான் ஹாப்மேன் பலத்த காயம் அடைந்தார். இவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
இது குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப். பி. ஐ., அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டசபை உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மநபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தாக்குதல் நடத்தியவர் இன்னும் தலைமறைவாக உள்ளார்.